இரானில் சமீபத்தில் ஒரு கலவரத்தை நடத்த திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் இரான் நாட்டு ரகசிய சேவைகளில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
மியான்மரில் ஏற்பட்டிருக்கும் மோச்சா புயல் காரணமாக 60 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மியான்மரில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த புயல் இதுவே.
பாகிஸ்தானில் அரசு உடைமைகளை இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தாக்கியதற்காக, அந்த நாட்டு ராணுவச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
18 ரஷ்ய ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவித்திருக்கிறது. இதனால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்படுகிறது.
9 மாதங்களுக்கு முன்பு, நியூயார்க்கில் நடந்த இலக்கிய விழாவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டார். அந்த தாக்குதலுக்குப் பிறகு, அவர் முதன்முறையாகப் பொதுவெளியில் காணப்பட்டார். மேற்கத்திய நாடுகளில் கருத்து சுதந்திரம் கடுமையான அச்சுறுத்தலில் இருப்பதாகக் கூறினார்.
முன்னாள் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவின் நெருங்கிய உறவினரான பூஷண் ரானா, சீனாவுடனான ஓர் ஆயுத ஒப்பந்தத்தில் தொடர்புடையதாக அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அமரேஷ் குமார் சிங் குற்றம்சாட்டினார்.
கான் திரைப்பட விழா என்பது பிரான்ஸ் நாட்டின் கான் என்னும் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா. 76-வது கான் திரைப்படத் திருவிழா நேற்று பிரான்சில் தொடங்கியது. இதில் மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாகூர், எல்.முருகன், சாரா அலி கான், மானுஷி சில்லர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
நகைச்சுவை நாடகமான (Comedy Drama) 'தி பியர் - சீசன் 2'-வின் முதல் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த சீசனின் பத்து தொடர்களும் ஜூன் 22-ம் தேதி வெளியிடப்படுகிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தன்னுடைய மகளுடன் சென்று ராணுவ செயற்கைக்கோள் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
http://dlvr.it/SpCrSp
Thursday, 18 May 2023
Home »
» செயற்கைக்கோள் நிலையத்தை ஆய்வுசெய்த கிம் ஜாங் உன் | மோச்சா புயலால் 60 பேர் பலி - உலகச் செய்திகள்