ரஷ்யாவின் காலினின்கிராட் பகுதியை போலாந்து இனி அதிகாரபூர்வமாக கோனிக்ஸ்பெர்க் (Konigsberg) என்று அழைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது ரஷ்ய மயமாக்குதலுக்கு (Russification) எதிரான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஹாங் காங் அதன் தேசியப் பாதுகாப்பு குறித்த வழக்குகளில், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் வாதாடவும், பங்கெடுத்துக்கொள்ளவும் தடை விதித்து, அதன் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரான சர்ஜி லாவ்ரோவ், நேற்று துருக்கி, சிரியா, இரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சிரியா, துருக்கி நாடுகளின் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இரான் நேற்று மேலும் ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்தது. மது, பாலியல் குற்றங்களுக்காக அந்த ஏழு பேர் தெஹ்ரானில் தூக்கிலிடப்பட்டதாக நார்வேயை மையமாகக்கொண்ட மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்தது.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் எட்டு நாள் ரிமாண்டில் வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு கலவரம் வெடித்திருப்பதால், தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வீடு தாக்கப்பட்டிருக்கிறது.
Jaish -e-Mohammad அமைப்பின் மூத்த தீவிரவாதியான அப்துல் ரவுஃப் அசாரை கறுப்புப் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று ஐ.நா-வில் இந்தியா கோரிக்கை விடுத்தது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. அப்துல் ரவுஃப் என்பவர் 1999-ம் ஆண்டு நிகழ்ந்த இந்தியன் ஏர்லைன்ஸ் கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான அன்டோனியோ கர்பஜல் (Antonio Carbajal) தனது 93-ம் வயதில் காலமானார். ஐந்து முறை பிஃபா உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொண்ட முதல் நபர் இவரே.
Writers Guild of America (WGA) அமைப்பிலுள்ள ஹாலிவுட் எழுத்தாளர்கள் ஊதிய உயர்வைக் கோரியும், நிலையான வேலையைக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
புகழ்பெற்ற பிளாகரான (Famous blogger) Heather Armstrong தன்னுடைய 47-வது வயதில் காலமானார். இவர் மக்களிடையே Dooce என்ற பெயரில் பரிச்சயமாக அழைக்கப்பட்டார்.
பின்லாந்து நாட்டின் பிரதமர் Sanna Marin தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப்போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். "நாங்கள் நண்பர்களாகத் தொடர்வோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.
http://dlvr.it/SnwFRs
Friday, 12 May 2023
Home »
» கணவரை விவாகரத்து செய்யும் பின்லாந்து பிரதமர் | இரானில் ஏழு பேருக்கு மரண தண்டனை - உலகச் செய்திகள்