கிரிக்கெட் வீரர் மொகமத் சமிக்கும் அவரின் மனைவி ஹசின் ஜஹானுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. மொகமத் சமி, தனது மனைவியை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். அதேநேரம், ஹசின் ஜஹான் விவாகரத்துக் கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.தலாக்
அதோடு ஹசின் ஜஹான், தன் வழக்கறிஞர் தீபக் பிரகாஷ் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், `நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தன்னிச்சையான முஸ்லிம் திருமண தனிநபர் சட்டமான தலாக், தலாக்-உல்-ஹசன் சட்டத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன். முஸ்லிம் விவாகரத்து சட்டப்பிரிவான தலாக்-உல்-ஹசனின் கீழ் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி மொகமத் சமி எனக்கு முதல் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸை தொடர்ந்து, நான் அறிந்தவர்களிடம் இது குறித்து விசாரித்தபோது அவர்களில் பலரும் இதே போன்று தலாக் விவாகரத்து முறையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. எனவேதான் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளேன்.
தலாக் முறை ரத்து செய்யப்பட்டாலும் முஸ்லிம் தனி நபர் சட்டத்தில் அது இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தலாக் சட்டம் முஸ்லிம் ஆண்களுக்கு முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்ய அதிகாரங்களை வழங்குகிறது.
தலாக் முறையில் விவாகரத்து செய்யும்போது பெண்களிடம் எந்த விளக்கமும் கேட்பதில்லை. தன்னிச்சையான விவாகரத்து சட்டம் பாலின ரீதியாக பெண்களுக்கு எதிராக பாரபட்சமாக இருக்கிறது. இது பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. முஸ்லிம் ஆண்கள் தன்னிச்சையான தலாக் சட்டத்தை தவறாக பயன்படுத்தி, மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக தலாக் கூறி பெண்களிடம் கேட்காமல் விவாகரத்து செய்துவிடுகின்றனர்.பெண் குழந்தை பிறந்ததால் `தலாக்'! - போலீஸில் புகார் அளித்த மனைவி
எனவே, பாலின மற்றும் மதப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவான விவாகரத்து வழிமுறைகளை வகுக்க வேண்டும். இதற்குப் புதிய சட்டம் வகுக்க வேண்டும். தலாக் போன்ற தன்னிச்சையான விவாகரத்துகளை செல்லாது என்று அறிவிக்கவேண்டும். தலாக் விவாகரத்துகளை ஊக்குவிக்கும் முஸ்லிம் தனிநபர் சட்டப்பிரிவுகளையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே இது போன்ற மனுக்கள் நிலுவையில் இருப்பதால் அதோடு சேர்த்து விசாரிப்பதாகக் கூறிய நீதிபதிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
http://dlvr.it/Sp8rXH
Wednesday, 17 May 2023
Home »
» `பொதுவான விவாகரத்து சட்டம் வேண்டும்’ - சுப்ரீம் கோர்ட்டில் கிரிக்கெட் வீரர் மொகமத் சமி மனைவி மனு