புதிய நாடாளுமன்றம் நாளை திறக்கவிருப்பதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில், பிரதமரால் திறக்கப்படவிருக்கும் நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), சிவசேனா (யுபிடி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஜனதா தளம் (ஐக்கிய) உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டன.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
மேலும், இந்த விழாவைப் புறக்கணிப்பதற்கு, ``குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைப் புறக்கணித்த நடவடிக்கை, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்" எனக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதற்கிடையில், காங்கிரஸ், `மலிவான அரசியலில்’ ஈடுபடுவதாகவும், அவசியமற்ற சர்ச்சைகளை கிளப்புவதாகவும் பா.ஜ.க பதிலளித்திருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) தலைவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "நான் டெல்லியில் இருந்திருந்தால் நிச்சயம் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்பேன். ஆனால், எனக்கு வேறு ஒரு விழாவில் கலந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது. புதிய நாடாளுமன்றம் கட்டியதற்காக எதிர்க்கட்சிகள் மத்திய அரசைப் பாராட்ட வேண்டும். ஆனால், அவர்கள் அரசை விமர்சிக்கிறார்கள்.புதிய நாடாளுமன்றம்
எதிர்க்கட்சிகள் திறப்புவிழாவைப் புறக்கணிப்பதை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக இருக்கிறேன். 30-35 ஆண்டுகளுக்கு முன்பு நான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தபோது புதிய நாடாளுமன்றம் கட்டுவது பற்றிக் கனவு கண்டோம். அப்போது பிரதமர் நரசிம்ம ராவ், சிவராஜ் பாட்டீல் மற்றும் நானும் இந்தத் திட்டத்தைப் பற்றி விவாதித்து, உண்மையில் அதற்கான வரைபடத்தைக்கூட உருவாக்கினோம். அதை எங்களால் அப்போது செய்ய முடியவில்லை.
ஆனால், தற்போது அது கட்டி முடிக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல விஷயம். சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளில், மக்கள்தொகை ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டு புதிய கட்டடத்தின் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.குலாம் நபி ஆசாத்
குறுகிய காலத்துக்குள் ஒரு நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவது எளிதானதல்ல, அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையைக் கண்டிப்பதற்கு பதிலாகப் பாராட்ட வேண்டும். குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் ஆதரவு என்றால், அவருக்கு எதிராக உங்கள் ஜனாதிபதி வேட்பாளரை ஏன் பரிந்துரைத்தீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.`பாஜக-வில் சேருவோர் மோடி வாஷிங் மெஷின் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறார்கள்’ - காங்கிரஸின் ராஜீவ் கௌடா
http://dlvr.it/SplQxB
Sunday, 28 May 2023
Home »
» புதிய நாடாளுமன்றம்: ``எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும்; ஆனால்..." - குலாம் நபி ஆசாத் சொல்வதென்ன?