ம.தி.மு.க-வில் வைகோவின் மகன் துரை வைகோவின் நியமனத்துக்கு தொடக்கத்திலிருந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் அந்தக் கட்சியின் அவைத்தலைவர் சு.துரைசாமி, தற்போது ம.தி.மு.க-விலிருந்து விலகும் முடிவுக்கு வந்திருக்கிறார். இது தொடர்பாக திருப்பூரில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``ம.தி.மு.க-வின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன்.
எனது விலகல் கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேருவதாக இல்லை. ஆனால் பெரியாரும், அண்ணாவும் எந்த லட்சியத்துக்காகப் பாடுபாட்டார்களோ, அந்த லட்சியத்துக்காக இனி என் வாழ்நாள் முழுவதும் பணியாற்றுவேன். சு.துரைசாமி
கடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களிலும் ம.தி.மு.க-விலிருந்து ராஜினாமா செய்துவிட்டுதான், தி.மு.க-வில் இணைந்து உதயசூரியன் சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிட்டார்கள். அப்படியென்றால், ஏற்கெனவே தி.மு.க-வில் இணைந்து விட்டதாகத்தானே அர்த்தம். ம.தி.மு.க இனி தனிக்கட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இனியும் ம.தி.மு.க-வை நடத்துவது வீண் வேலை.
இளைஞர்களின் ஆற்றலை விரயமாக்க வேண்டாம். வைகோ சொல்வதை நான் பலமுறை எதிர்த்திருக்கிறேன். பேசுவது என்றாலும், விமர்சிப்பது என்றாலும் அவர் எல்லை தாண்டுவார். ஒருமுறை தன்னுடைய தவற்றை உணர்ந்து வைகோ என்னிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.
கோயமுத்தூர் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச்செயலாளராக நானும், பொருளாளராக சீனிவாசனும் இருக்கிறோம். தொழிற்சங்கம் பதிவுசெய்யப்பட்ட அமைப்பு. ஆண்டுதோறும் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்கிறோம். 1967-ம் ஆண்டு தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினராக நான் இருந்தபோது, கோவையில் தொழிற்சங்க கட்டடத்தை கருணாநிதி திறந்துவைத்தார். ம.தி.மு.க-வுக்கும், நாங்கள் நடத்திவரும் தொழிற்சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவே நான் தொடர்வேன்.வைகோ - திருப்பூர் துரைசாமி
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகுதான் துரை வைகோ கட்சிக்குள் வந்தார். ம.தி.மு.க-வில் வைகோவுக்கு அடுத்து மல்லை சத்யா இருக்கிறார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக வைகோ செல்ல முடியாத இடங்களுக்கும், பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், அவருக்குத்தான் பொறுப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கட்சிக்குப் பாடுபட்டவர்களை ஒதுக்கும் நிலைதான் இன்றைக்கு ம.தி.மு.க-வில் நிலவுகிறது” என்றார்.Loading…
http://dlvr.it/SpvWbL
Wednesday, 31 May 2023
Home »
» ``மதிமுக-வை நடத்துவது வீண் வேலை; கட்சியிலிருந்து விலகுகிறேன்!" - வைகோவுக்கு சு.துரைசாமி கடிதம்