அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஆண்டு, ஜூலை 11-ம் தேதி, வானகரம் திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்துக்குச் சென்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது.
அப்போது, அலுவலகத்திலிருந்து சொத்து ஆவணங்கள், வாகனங்களின் ஆர்.சி புத்தகங்கள், கம்ப்யூட்டர் உட்பட பல பொருள்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்றுவிட்டதாக, காவல்துறையிடம் அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதிமுக தலைமை அலுவலகம்
கலவரம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை தொடங்கிய நிலையில், அ.தி.மு.க அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருள்களை காவல்துறையிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஒப்படைத்தனர்.
அந்தப் பொருள்கள் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அந்தப் பொருள்களை ஒப்படைக்கக் கோரி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சி.வி.சண்முகம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், வைத்திலிங்கம் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் இறுதித் தீர்ப்பு பிறப்பிக்கப்படாததால், ஆவணங்களுக்கு யார் உரிமையாளர் என்று தற்போது முடிவுசெய்ய முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது.சி.வி.சண்முகம்
சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, அ.தி.மு.க அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள், பொருள்களைக் கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். அமித் ஷா-வுடனான சந்திப்புக்குப் பிறகும், அதிமுக-வைச் சீண்டும் தமிழக பாஜக - நடந்தது என்ன?!
http://dlvr.it/SnYmKk
Friday, 5 May 2023
Home »
» அதிமுக அலுவலக விவகாரம்: அனைத்துப் பொருள்களையும் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!