கனடா நாட்டில் விரைவில் சிகரெட் பாக்கெட்டுகளில் `Cigarettes cause cancer and Poison in every puff’ உள்ளிட்ட எச்சரிக்கை வாசகங்களை அச்சிட கனடாவின் சுகாதாரத்துறை திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஷ்ய அதிபர் புதின் தன்னுடைய அமைச்சரவை உறுப்பினர்களிடம்,``சில விரும்பத்தகாதவர்கள் ரஷ்யாவைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும், இதை அனுமதிக்க வேண்டாம்'' என்று தெரிவித்திருக்கிறார்.
கான்ஃபெடரேஷன் ஆஃப் பிரிட்டிஷ் இண்டஸ்ட்ரீஸ் (Confederation of British Industry) நிறுவனத்தின் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுப் புகார்கள் எழுந்திருப்பதால், அதன் வருவாய் சரிந்தது. இதனால் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால், அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் தவித்துவருகிறது. இலங்கையைவிட (25.2) தெற்காசியாவில் அதிகமாக பாகிஸ்தானில்தான் பணவீக்கம் 37.97-ஆக உயர்ந்திருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொண்டதாக ஒரு செய்தித்தாள் குழுவுக்கு எதிரான வழக்கின் விசாரணை, அடுத்த வாரம் வரவிருக்கிறது. இது தொடர்பாக ஹாரி, நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்கவிருக்கிறார். 130 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும், முதல் மூத்த பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹாரி என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் முக்கிய அலுவலர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் பல ஆயிரக்கணக்கான ஐபோன்களை அமெரிக்க உளவுத்துறை ஹேக் செய்திருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியிருக்கிறது.
மெக்ஸிகோவில் பல்வேறு இடங்களில், 45 பைகளில் மனித உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஐந்து இளைஞர்கள் காணாமல்போனதைத் தேடும் பணியில் இந்த உறுப்புகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
வாடிகனிலுள்ள பீட்டர்ஸ் பசிலிக்காவில், உக்ரைனில் நடைபெறும் போரைக் கண்டித்து, ஒரு நபர் தன் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவர் உடலில், உக்ரைன் குழந்தைகள் காப்பாற்ற பட வேண்டும் என்பதைக் குறிக்கும் படங்கள் வரையப்பட்டிருந்தன.
மனிதாபிமான அடிப்படையில் 200 இந்திய மீனவர்கள் மற்றும் மூன்ரு சிவில் கைதிகளை விடுவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்திருக்கிறார்.
ஒடிசாவில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்துக்கு கனடா பிரதமர் முதல் ரஷ்ய அதிபர் வரை உலகத் தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர். தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யவிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
http://dlvr.it/Sq6jws
Sunday, 4 June 2023
Home »
» 45 பைகளில் மனித உறுப்புகள் கண்டெடுப்பு|ஒடிசா ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல் - உலகச் செய்திகள்