``செந்தில் பாலாஜியோடு மாணவர் அணியில் ஒன்றாக பயணித்தவன் என்ற அடிப்படையில், அவரின் அரசியல் சித்து விளையாட்டுகளை ஆரம்பத்திலேயே அறிந்தவன் நான்." என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``முதலமைச்சர் ஸ்டாலின், `எங்களுக்கு எல்லா அரசியலும் தெரியும். உருட்டல், மிரட்டல்களுக்குப் பயப்பட மாட்டோம்' என்று கூறிவிட்டு, செந்தில் பாலாஜியின் அரசியலைப் பற்றி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்.ஆர்.பி.உதயகுமார்
செந்தில் பாலாஜியோடு மாணவர் அணியில் ஒன்றாகப் பயணித்தவன் என்ற அடிப்படையில், அவரின் அரசியல் சித்து விளையாட்டுகளை ஆரம்பத்திலேயே அறிந்தவன். நான் கழக மாணவரணிச் செயலாளராக பொறுப்பேற்றபோது, கரூர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராக செந்தில் பாலாஜி இருந்தார். கரூர் மாவட்டத்தில் நுணுக்கமான அரசியலையும், பல்வேறு விஷயங்களையும் கையாண்டு சித்து வேலைகள் செய்து கைதேர்ந்த அரசியல்வாதி ஆனார்.
கரூர் மாவட்டத்தில் கே.சி.பழனிசாமியின் மணல் கொள்ளையை வைத்து ஒரு போராட்டம் நடத்தினார். அவரிடமே பணத்தைப் பெற்று அவரை எதிர்த்துப் போராட்டம் செய்தார். அதன் மூலம் பல பதவிகளைப் பெற்று கரூர் மாவட்டத்தில் அசுர வேகத்தில் வளர்ந்தார். செந்தில் பாலாஜி
அம்மாவின் இல்லத்திலுள்ள சுவரிடம் பேசும் கலையைக் கற்றவர் செந்தில் பாலாஜி. அவருக்கு ஏற்பட்ட அவப்பெயர் காரணமாக அமைச்சர் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் பதவியை அம்மா ரத்துசெய்தார்.
தற்போது செந்தில் பாலாஜியின் கைதை, மொழி போராட்டம், மிசா அடக்குமுறையுடன் ஒப்பீட்டு ஸ்டாலின் கூறியிருக்கிறார். தன்மீதான விசாரணையை மொழிப்போருக்கு இணையாக ஒப்பிடுகிற அளவுக்கு கருணாநிதியின் குடும்பத்திலும், திராவிட முன்னேற்றக் கழகத்திலும் தன் சித்து வேலையை செந்தில் பாலாஜி காண்பித்துவிட்டார்.
செந்தில் பாலாஜி ஆரம்பத்தில் அ.தி.மு.க-வில் குழப்பத்தை விளைவித்தார். கடந்த எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில், தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன் கொள்ளையடித்தப் பணத்தின் மூலம் கட்சித் தலைமைக்கு எதிராக புதிய தலைமையை உருவாக்கி சதித் திட்டம் தீட்டி, டி.டி.வி.தினகரன் முதலமைச்சராக வாய்ப்பிருப்பதாக ஆசைக்காட்டி, கடைசியில் அவரை நடுத்தெருவில் விட்டார்.ஆர்.பி.உதயகுமார்
மீண்டும் தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடியாரிடம் தூதுவிட்டார். செந்தில் பாலாஜியின் அரசியல் சித்து விளையாட்டு தெளிவாக தெரிந்த காரணத்தினால், எடப்பாடியார் சேர்க்க மறுத்துவிட உடனே ஸ்டாலினிடம் அடைக்கலமாகிவிட்டார். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியை எதிர்த்து அரசியல் செய்த தி.மு.க, இன்று செந்தில் பாலாஜியிடம் கட்சியை அடமானம் வைத்திருக்கிறது.
இந்த தலைகுனிவை ஏற்படுத்திய செந்தில் பாலாஜிக்கு வக்காலத்து வாங்குவதற்கு, எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியாரைப் பற்றி நீங்கள் தரக்குறைவாகப் பேசுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். ஏழு கோடி தமிழர்களின் எதிர்காலமாக உள்ள எடப்பாடியாரை `பாதம் தாங்கி' என்றும், `அடிமை' என்றும் இன்றைக்கு வாய்க்கு வந்தபடி பேசியிருப்பது ஒரு முதலமைச்சருக்கு அழகா? முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜி
எடப்பாடியார் தமிழ்நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக 11 அரசு மருத்துவமனைகளை ஒரே ஆண்டில் பெற்றுக்கொடுத்த அரசியல் சாணக்கியர். ராஜதந்திரம், நிர்வாகத்திறன், வெற்றியின் ஒட்டுமொத்த அடையாளம். இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசிடம் விதண்டாவாதம் பேசி தமிழத்துக்கு வந்த நிதியை தடுத்துவிட்டனர். இதற்காகவா மக்கள் அதிகாரத்தைக் கொடுத்தார்கள். நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை, ஏனென்றால் எங்கள் மடியில் கனமில்லை.
செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்தால் உங்களுக்கு ஏன் தொடை நடுங்குகிறது... அவர் ஒன்றும் தி.மு.க-வின் கொள்கை வீரன் அல்ல, இதேபோல் சாதாரண தி.மு.க தொண்டருக்கும் பேசுவீர்களா... செந்தில் பாலாஜியை ஏன் சொக்கத்தங்கம்போல் காட்டுகிறீர்கள்? என்ன தியாகம் செய்தார்... இதுதான் மக்களின் கேள்வியாக இருக்கிறது.
இனிமேல் கழகப் பொதுச்செயளாலர் எடப்பாடியாரை நீங்கள் விமர்சித்தால், அதற்காக விளைவுகளை நீங்கள் சந்திக்கவேண்டியதிருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.இலாகா மாற்றத்துக்கு ஓகே... செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர `நோ' - ஆளுநர் அறிக்கை சொல்வதென்ன?
http://dlvr.it/SqpYvZ
Saturday, 17 June 2023
Home »
» ``செந்தில் பாலாஜியுடன் ஒன்றாகப் பயணித்தவன்; அவரின் சித்து விளையாட்டுகளை அறிவேன்!" - ஆர்.பி.உதயகுமார்