மணிப்பூரில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் இன வன்முறை, தேசத்தின் துயரமாக மாறியிருக்கிறது. மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பற்றியெரிந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கு அமைதியை நிலைநாட்ட உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது. இந்த நிலையில், மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல், அமெரிக்காவுக்குப் போய்விட்டார் பிரதமர் மோடி.மோடி - ஜோ பைடன், ஜில் பைடன்
`அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் ஆகியோருடன் பிரதமர் மோடி சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களைக் கண்டு மணிப்பூர் மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்' என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர். ஏற்கெனவே, ‘பிரதமர் மோடியைக் காணவில்லை’ என்று சுவரொட்டிகளை ஒட்டி தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய மணிப்பூர் மக்கள் மத்தியில், பிரதமர் மோடி மீதான கோபம் மேலும் அதிகரித்திருக்கிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பா.ஜ.க-வின் வெறுப்பு அரசியல் மணிப்பூரை எரித்து, 100-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்திருக்கிறது. இந்தியாவை தோல்வியுறச் செய்து முற்றிலும் அமைதியாக இருக்கிறார் பிரதமர். மணிப்பூரில் ஒவ்வோர் இதயத்திலும் வெறுப்பின் சந்தையை மூடிவிட்டு, அன்பின் கடையைத் திறப்போம்” என்று சமீபத்தில் ட்வீட் செய்தார். மேலும், `மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை அங்கு அனுப்பிவைக்க வேண்டும்’ என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.ராகுல் காந்தி.
மணிப்பூரிலும் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஒருங்கிணைந்த பத்து அரசியல் கட்சிகள், மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க சட்டமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தின. மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அந்தக் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையோ, மணிப்பூர் மக்களின் வேண்டுகோள்களையோ மத்திய அரசு மதிக்காமலேயே இருந்தது.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடியைச் சந்திக்க வேண்டுமென்று மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஜக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் நேரம் கேட்டனர். பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கடந்த ஜூன் 10-ம் தேதி அளித்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கு முயன்றனர். ஆனால், அவர்களைச் சந்திக்காமலேயே மோடி அமெரிக்காவுக்குப் போய்விட்டார். இபோபி சிங் - மோடி
இந்த நிலையில், மத்திய அரசின் அணுகுமுறையில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை ஜூன் 24-ம் தேதி கூட்டவிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், “மணிப்பூர் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 24-ம் தேதி மாலை 3 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அமித் ஷா கூட்டியிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பா.ஜ.க-வைச் சேர்ந்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அமித் ஷா சந்திப்புக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜூன் 23-ம் தேதி (இன்று) பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்கிறார்கள். அதற்கு மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அமித் ஷா கூட்டியிருக்கிறார். பிரேன் சிங் - மோடி
உரிய நேரத்தில், உரிய நடவடிக்கையை மத்திய, மாநில பா.ஜ.க அரசுகள் எடுக்காத காரணத்தால் மணிப்பூரில் நிலைமை கைமீறிப்போய்விட்டதாக மணிப்பூர் அரசியலை உற்றுநோக்கம் அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்தனர். எவருடைய உயிருக்கும் உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லாத லிபியா, சிரியா போன்ற நாடுகளைப்போல, மணிப்பூர் மாறிவிட்டதாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நிஷிகாந்தா சிங் ட்வீட் செய்திருந்தார். ‘இனி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்ற கருத்தும் சில தரப்பினரிடம் மேலோங்கியது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க கார்கேவை பிரதமர் வேட்பாளர் ஆக்குகிறதா காங்கிரஸ்?!
`மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் டபுள் இன்ஜின் சர்கார் தோல்வியடைந்துவிட்டது' என்ற வெளிப்படை விமர்சனம் எழத் தொடங்கியிருக்கிறது. ‘இரும்பு மனிதர்’ என்றெல்லாம் பா.ஜ.க-வினரால் பெருமையுடன் குறிப்பிடப்படும் அமித் ஷாவால்கூட, மணிப்பூரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இத்தகைய சூழலில்தான், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சில தரப்பினரிடமிருந்து எழுந்தது. மோடி - அமித் ஷா
ஆனால், `மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க அரசைக் கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைப்பது சரியானதல்ல’ என்றும், `அது பா.ஜ.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்’ என்றும் பா.ஜ.க தலைவர்கள் கருதுகிறார்கள். எனவேதான், மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்த சூழலில், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற முடிவுக்கு அமித் ஷா இறங்கிவந்திருக்கிறார்.
மணிப்பூரில் விரைவில் `வன்முறை' தீ அணைக்கப்பட்டால் சரி..!
http://dlvr.it/Sr683P
Friday, 23 June 2023
Home »
» Manipur Violence : இறங்கி வரும் மத்திய அரசு... தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா அமித் ஷா?