கன்னியாகுமரி:
குமரி காவல்துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, என்.சி.சி மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.கன்னியாகுமரி:
உலக போதை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி ஆட்சியர் ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.சென்னை:
கடல் ஆமை பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வுக்காக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் முப்பதாயிரம் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட கடல் ஆமை சிற்பம்.சென்னை:
காசிமேடு கடற்கரையில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற தலா தாவும் படகுப் போட்டி.ராமேஸ்வரம்:
பாம்பன் பாலத்தில் அதிவேகமாக வந்த இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.சென்னை:
சேப்பாக்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற பட்டினிப் போராட்டம்.சென்னை:
மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் மனிதப் படுகொலையைக் கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.விழுப்புரம்:
ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்.தஞ்சாவூர்:
ராஜராஜன் நகரில் மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார் சாலை தரமற்ற முறையில் இருப்பதாக, அந்தப் பகுதியினர் சாலையில் போடப்பட்ட ஜல்லிக் கற்களைக் கையில் பெயர்த்தெடுத்து சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினர்.ஈரோடு:
கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் ஸ்ரீமஹா சுதர்ஸன யாகம் நடைபெற்றது.ஈரோடு:
நான்காவது நாளாகத் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திருப்பூர் நாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் போராட்டத்தில் கலந்துகொண்டார்.ஈரோடு:
தமிழக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ராமநாதபுரம்:
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தங்கச்சிமடத்தில் நடைபெற்ற, அன்னை ஸ்கொலஸ்டிகா கல்லூரி மாணவிகளின் பேரணி.கோயம்புத்தூர்:
போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாராத்தானில் கலந்துகொண்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் பொதுமக்கள்.கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, தனியார் பள்ளிகளுக்கு ஆணைகள் வழங்கினார்.வேலூர்:
காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி.வேலூர்:
பாதுகாப்பு கேட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி.விழுப்புரம்:
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகள்.புதுச்சேரி:
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த தமிழக மாணவி முத்தமிழ் செல்வியை புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாராட்டினார்.புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்களுக்கு புதுச்சேரி பிராந்தியத்தில் பணியிட மாற்றம் வேண்டி முதல்வர் ரங்கசாமி இல்லத்தை முற்றுகையிட்டனர்.புதுச்சேரியில் நடைபெறுகிற பாரம்பர்ய மற்றும் மரபுசார் மருத்துவ மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட துணைநிலை
ஆளுநர் தமிழிசை.புதுச்சேரி:
மத்திய அரசு 2022-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்திருக்கும் புதுச்சேரி நிரவி காவல் நிலையத்துக்கான சான்றிதழை ஏ.டி.ஜி.பி., ஆனந்த மோகனிடமிருந்து இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி பெற்றுக்கொண்டார்.புதுச்சேரி:
அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் பணிபுரிகிற 13 வருவாய் ஆய்வாளர்களுக்கு துணை தாசில்தார்களாக பதவி உயர்வு ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி:
புதிதாகத் தேர்வான காவலர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றன.மதுரை:
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயருக்கு எதிராக, தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதியில் சரிவர பணிகள் நடைபெறாதது குறித்து கண்டனம் தெரிவித்தார்.விருதுநகர்:
மரம் ஒன்றில் அழகிய கூடுகள் கட்டிவரும் தூக்கணாங்குருவிகள்.
http://dlvr.it/SrHlbT
Tuesday, 27 June 2023
Home »
» செல்ஃபி எடுத்த டிஜிபி |பிரமாண்ட கடல் ஆமை சிற்பம்|எவரெஸ்ட் ஏறிய மாணவிக்குப் பாராட்டு - News in Photos