நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்!
நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருக்கிறது!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், ``பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருக்கிறது. இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் இருந்த நான்கு அடைப்புகள் அகற்றப்பட்டிருக்கின்றன. தற்போது அவர் சிறப்பு இதய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது'' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவு..!
செந்தில் பாலாஜி
அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், தற்போது அறுவை சிகிச்சை முடிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. கிட்டத்தட்ட 5 மணி நேரம் இந்த சிகிச்சை நடைபெற்றதாகக் கூறப்பட்டிருக்கிறது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை!
செந்தில் பாலாஜி
அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்றுவருகிறது. செந்தில் பாலாஜியின் இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் குழு, மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பு..!
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். இந்த நிலையில், இன்று நியூயார்க்கில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ எலான் மஸ்க்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சிறப்பாக இருந்ததாகத் தெரிவித்திருக்கும் மஸ்க், பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்தார். மேலும், அடுத்த ஆண்டில் தான் இந்தியாவுக்கு வரத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் மஸ்க்.
http://dlvr.it/Sr0LR4
Wednesday 21 June 2023
Home »
» Tamil News Today Live: `நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்' - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு