அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை இதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
திருவாரூரில் கலைஞர் கோட்டம்... இன்று திறந்துவைக்கிறார் நிதிஷ் குமார்!
திருவாரூர் மாவட்டம் காட்டூரில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுரஅடி பரப்பில் கட்டப்பட்டிருக்கும் `கலைஞர் கோட்டம்’ திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைபெறுகிறது.
விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் திறந்துவைக்கின்றனர். விழாவில் பங்கேற்பதற்காக சிறப்பு விமானம் மூலம் திருச்சி வரும் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ஆகியோர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருவதாகவும், பின்னர் அங்கிருந்து கார் மூலம் காட்டூர் வந்து, விழாவில் பங்கேற்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. `அப்பாவுக்கு மகன் ஆற்றும் கடமை’ - திருவாரூர் `கலைஞர் கோட்டத்தில்’ நெகிழ்ந்த ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவே திருவாரூர் வந்து, சன்னதி தெருவிலுள்ள இல்லத்தில் தங்கியிருக்கிறார். மேலும், நேற்று கலைஞர் கோட்டம் வந்து ஆய்வுமேற்கொண்டார். விழா ஏற்பாடுகள் குறித்தும் கேட்டு தெரிந்துகொண்டார்.
http://dlvr.it/SqxNYS
Tuesday, 20 June 2023
Home »
» Tamil News Today Live: `நாளை செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது' - மா.சுப்பிரமணியன்