293-வது மதுரை ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றது முதல் அரசியல்ரீதியான கருத்துகளையும் அவ்வப்போது பேசிவருகிறார்.காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ``இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடு எப்படியிருக்கிறது?” என்ற கேள்விக்கு, பதில் சொல்ல யோசித்தவர் பின்பு,
" சிறப்பாகச் செயல்படுறாங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும்" என்றார்.மதுரை ஆதீனம்
"மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் பொது சிவில் சட்டம் குறித்து?” கேட்டதற்கு
"பொது சிவில் சட்டத்தை வரவேற்கிறேன். அது எல்லா மக்களுக்கும் பொதுவான சட்டம், நல்லதுதான்" என்றார்.
"எல்லா மதத்தினருக்கும் பொதுவான சட்டம் சரியானதா?" என்றதற்கு,
"எல்லோருக்கும் ஒரே சட்டம் நல்லதுதான்'' என்றார்.
தொடர்ந்து, "சாமியார்களுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்றதற்கு,காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்
``அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஆர்டினரியா எல்லோருடனும்தான் நிக்கிறேன். தனியா விமானத்திலயா பறந்துகொண்டிருக்கிறேன்... எல்லோருடன்தான் நிக்கிறேன். அதனால பொதுவான சட்டத்தை வரவேற்கிறேன்" என்று கூறினார்.
http://dlvr.it/SrxQVc
Monday, 10 July 2023
Home »
» ``சாமியார்களுக்கும் சாமானியர்ளுக்கும் பொதுவான சட்டம் நல்லதுதான்!" - மதுரை ஆதீனம்