தி.மு.க அரசு ஆட்சி அமைத்து 27 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், காரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.அண்ணாமலை - முதல்வர் ஸ்டாலின்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகம் முழுவதும் லஞ்சம், விலைவாசி உயர்வு, கனிமவளக் கொள்ளை, பெண்களுக்கான பாதுகாப்பின்மை, டாஸ்மாக் முறைப்படுத்தாமை, மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் வாய்திறக்காதது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியில் மீதமிருக்கும் நாள்களில் இவற்றைச் சரிசெய்வார்கள் என நம்புகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மின் கட்டணம் 3 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது.
பிரதமர் மோடியை எதிர்ப்பது மட்டுமே முதல்வர் ஸ்டாலினின் முக்கியப் பணியாக இருக்கிறது. மணிப்பூர் விவகாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த முதல்வர் திடீரென விழித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் முடிந்து 210 நாள்கள் கடந்திருக்கின்றன. இன்னும் அதில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் பா.ஜ.க தொண்டரைக் காலில் விழவைத்திருக்கிறார் தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர். எனவே, மணிப்பூர் விவகாரத்தில் முதல்வர் அரசியல்வாதியாகச் செயல்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.முதல்வர் ஸ்டாலின்
மணிப்பூரில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசு சேர்ந்து சரி செய்வார்கள். இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட செய்தி பாதைபதைப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பாகவும் மணிப்பூர் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை 6 பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள். மணிப்பூரின் கடந்த காலம்கூட எப்போதும் கொந்தளிப்பானதுதான். 2014-க்குப் பிறகுதான் அமைதியை நோக்கி மணிப்பூர் நகர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்பால் தற்போது அங்கே கலவரம் வெடித்திருக்கிறது.
எனவே முதல்வர் முழு நேர அரசியல்வாதியாகத்தான் மணிப்பூர் விவகாரத்தில் செயல்படுகிறார். கெலோ இந்தியாவை ஆரம்பித்த மத்திய அரசுக்கு மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு எப்படி பயிற்சியளிக்க வேண்டும் என்பது தெரியும். எனவே மணிப்பூர் விவகாரத்துக்குச் செல்லாமல், கர்நாடகாவிலிருந்து தண்ணீர் பெற்றுத்தரும் வழியை முதல்வர் செய்யலாம். தமிழகம் தேசவிரோதிகளின் புகழிடமாக மாறியிருக்கிறது. தொடந்து என்.ஐ.ஏ சோதனை நடந்துவருகிறது.மணிப்பூர் பழங்குடிப் பெண்கள் நிர்வாணக் கொடுமை
காவல்துறையின் கை கட்டப்பட்டிருப்பதால் தமிழகம் தேசவிரோதிகளின் புகழிடமாகிவருகிறது. தெலங்கானா, கேரளா, தமிழகத்தில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அந்தந்த மாநில மக்களிடம் அதிகம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அவர் எங்கு போட்டியிடுவார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தியா என்று சொல்லும்போது உள்ளத்தில், உணர்வில், ரத்தத்தில், நாடி நரம்புகளில் `இந்தியன்' என்ற உணர்விருக்க வேண்டும்.
தி.மு.க பிரிவினைவாதக் கட்சி. காஷ்மீரின் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா போன்றோர் இந்தியாவுடன் சேரமாட்டோம் என்ற கருத்தால் 370 நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரும் ஓர் அறையில் அமர்ந்து தங்கள் கூட்டணிக்கு `இந்தியா' எனப் பெயர் வைத்துக்கொண்டால் அதை மக்கள் எப்படி ஏற்பார்கள். புலியைப் பார்த்து நாய் சூடுபோட்டுக்கொண்டதுபோல எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு `இந்தியா' எனப் பெயர் வைத்திருக்கின்றன.எதிர்க்கட்சிகள் கூட்டம்
எங்கள் கூட்டணியான என்.டி.ஏ-வில் பா.ஜ.க-வின் முதல்வர்கள் பங்கெடுத்தார்கள். மூன்றாவது முறையும் மோடிதான் பிரதமர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சென்று பிரதமர் மோடி தமிழகத்துக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை மக்களுக்கு விளக்கவே நடைப்பயணம்" எனத் தெரிவித்தார்.அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை இல்லை... பாவயாத்திரை! - காயத்ரி ரகுராம் ‘கலாய்’
http://dlvr.it/SsdV2k
Monday, 24 July 2023
Home »
» ``புலியைப் பார்த்து நாய் சூடுபோட்டுக்கொண்டதுபோல எதிர்க்கட்சிகள் கூட்டணி" - அண்ணாமலை சாடல்