மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் தொடரும் இரண்டு குழுவுக்கு மத்தியிலான கலவரம், இந்தியாவைப் பெரும் சஞ்சலத்துக்குள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக மே 4-ம் தேதி இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களின் குடும்பத்தாரையும் கொலைசெய்த பிறகும் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கிறது. அது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையான பிறகு, அதாவது ஏறத்தாழ 76 நாள்களுக்குப் பிறகு சில குற்றவாளிகளைக் கைதுசெய்திருக்கிறது.I.N.D.I.A கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் கூடியது. அப்போது, கடந்த சில மாதங்களாக 100-க்கும் மேற்பட்டோர் பலியாவதற்குக் காரணமான மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி 15 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நோட்டீஸ் அளித்தனர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, குறுகிய கால விவாதம் நடத்தும் விதி 176-ன்கீழ் மணிப்பூர் விவகாரம் குறித்த விவாதத்துக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது.
ஆனால் எதிர்க்கட்சிகள், சபையின் அனைத்து அலுவல்களும் இடைநிறுத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும், விதி 267-ன் கீழ் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என ராஜ்ய சபாவில், 27 எம்.பி-க்கள் நோட்டீஸ் சமர்ப்பித்திருக்கின்றனர். இதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் ‘I.N.D.I.A’ கூட்டணி எம்.பி-க்கள் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அமித் ஷா
மணிப்பூர் கலவரம் குறித்த விவாதம் தொடர்பான கூச்சல் குழப்பத்தால் மட்டுமே, மூன்று முறை சபை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``மணிப்பூர் குறித்து சபையில் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன். இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடு உண்மையை அறிந்துகொள்வது அவசியம். ஆனால், எதிர்க்கட்சிகள் ஏன் ஒத்துழைக்க மறுக்கின்றன?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து, பிற்பகல் 2:30 மணிக்கு சபை கூடியபோது, இரு தரப்பு எம்.பி-க்களும் மணிப்பூர் குறித்து விவாதம் நடத்த விரும்புவதாகக் கூறினாலும், இரு தரப்பினரின் கூச்சல் தொடர்ந்ததால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.`மணிப்பூர் கலவரத்துக்கு பாஜக அரசும் உடந்தை!' - மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ `பகீர்' குற்றச்சாட்டு
http://dlvr.it/SshG1s
Tuesday, 25 July 2023
Home »
» `மணிப்பூர் குறித்த உண்மையை நாட்டு மக்கள் அறிய வேண்டும்!' - அமித் ஷா