மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையில் மோரே நகரம் அமைந்திருக்கிறது. அங்கு, சுமார் 3,000 தமிழர்கள் வசித்துவருகிறார்கள். மணிப்பூரில் இரண்டரை மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடித்துவரும் நிலையில், மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், மோரே பகுதியில் பெரியளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.மணிப்பூரில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள்
மணிப்பூரில் மலை மாவட்டங்களில் வசிக்கும் குக்கி பழங்குடி மக்களுக்கும், சமவெளிப்பகுதியில் வசிக்கும் மைதேயி இனத்தவருக்கிடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் வெடித்தது. அதன் பிறகு, அங்கு இரண்டு முறை தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
அங்கு, குக்கி பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இரண்டாவதாக மைதேயிகளும், மூன்றாவதாக தமிழர்களும் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்.
தமிழர்களைப் பொறுத்தளவில் குக்கி, மைதேயி ஆகிய இரண்டு இனத்தவருடனும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள். ஆகவே, தமிழர்களை அவர்கள் விரோதிகளாகப் பார்ப்பதில்லை. கடந்த மே மாதம் வன்முறை வெடித்தபோது, அங்குள்ள மைதேயி இனத்தவரின் வீடுகளையும் கடைகளையும் குக்கி மக்கள் எரித்திருக்கிறார்கள். அந்தத் தாக்குதலில், 10-க்கும் மேற்பட்ட தமிழர்களின் வீடுகளும் தீயில் எரிந்திருக்கின்றன. ராணுவம்
உடனே, தமிழர்களுடன் குக்கி மக்களும் சேர்ந்து அந்தத் தீயை அணைத்திருக்கிறார்கள். அதன் பிறகு, தமிழர்களின் வீடுகளோ, கடைகளோ தாக்கப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில், ஜூலை 16-ம் தேதியன்று மோரே நகரில் தமிழர்களின் வீடுகளும் கடைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மோரே கடைவீதியில் குக்கி இனத்தைச் சேர்ந்த வன்முறையாளர்கள், மைதேயி இனத்தவரின் கடைகளையும், வீடுகளையும் தீவைத்துக் கொளுத்தியிருக்கிறார்கள். அதில், 30-க்கும் மேற்பட்ட கடைகளும் வீடுகளும் தீக்கிரையானதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தையடுத்து, மோரே நகரம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது.மணிப்பூர்
இது குறித்து மோரே தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.சேகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஆரம்பத்தில், மோரே நகரில் 14,000 தமிழர்கள் வசித்தோம். 1995-ம் ஆண்டு குக்கி மக்களுக்கும் தமிழர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு, அங்கு தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்போது, 3,000 தமிழர்கள் இருக்கிறோம். குக்கி, மைதேயி என இரண்டு இனத்தவரிடையேயும் தமிழர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மோரே என்பது ஒரு மினி இந்தியா மாதிரி. அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் அங்கு வசிக்கிறார்கள்.தொடரும் `அதிபயங்கரங்கள்' - மணிப்பூர் மக்களுக்காக இதர மாநிலங்களில் ஆதரவுக்குரல் எழவில்லையா?!
கடந்த மே 3, 28 ஆகிய இரண்டு நாள்களில் ஏற்பட்ட வன்முறையில், தமிழர்களுக்குச் சொந்தமான 40 வீடுகளும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. தற்போது, மீண்டும் தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால், மோரே நகரில் பதற்றம் நிலவுகிறது. மணிப்பூர் முதல்வருடன் அமித் ஷா
அங்கு கடந்த 60 - 65 வருடங்களாக வசித்துவருகிறோம். எங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், தமிழக மக்களும் தமிழக அரசும்தான் எங்களுக்கு உதவ வேண்டும். தற்போது, தமிழர்களுடைய 35 வீடுகள் எரிந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசு உதவிசெய்ய வேண்டும்” என்றார் வி.சேகர்.
http://dlvr.it/Ssrkp3
Friday, 28 July 2023
Home »
» மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே நகரில் மீண்டும் வன்முறை... கள நிலவரம் என்ன?