மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி குறித்துப் பேசியிருப்பது எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக்குழுவின் 38-வது கூட்டத்தில் நேற்று பேசிய அமித் ஷா, ``உள்ளூர் மொழிகளுக்கு இந்தி போட்டியாக இல்லை. இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்புகள் எதுவுமின்றி இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்" என்று பேசியிருந்தார்.ஸ்டாலின் - அமித் ஷா
இதற்கு எதிர்வினையாற்றிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ``அமித் ஷாவின் பேச்சு, மற்ற மொழி பேசும் மக்களை இந்திக்குக் கொத்தடிமையாக்கும் யதேச்சதிகார முயற்சி. இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மையல்ல. 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்காதீர்'' என அமித் ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `இதுவொன்றும் 1965 அல்ல என்பதை நினைவில்கொள்ள வேண்டும்' என ஸ்டாலினுக்கு பதிலளித்திருக்கிறார்.
இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ``2011-ல் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியை அமல்படுத்த 170 பரிந்துரைகளை முன்வைத்தபோது, ஸ்டாலின் என்ன செய்துகொண்டிருந்தார்... ஒருவேளை உங்களின் கூட்டணியே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை கொண்டு ரெய்டு நடத்தியது உங்களை மோசமாக பாதித்ததால் மௌன விரதம் இருந்தீர்களா... ஸ்டாலின் எதற்காக இப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மட்டும் குறிப்பிடுகிறார்?அண்ணாமலை
`அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே நாடு அதிகாரம் பெறும்' என்றுதான் அமித் ஷா கூறியிருக்கிறார். எனவே, தமிழ்நாட்டுக்குள் தமிழ் தனித்து நிற்கிறது என்பதை உறுதிப்படுத்தியவர்கள், இது 1965 அல்ல என்பதை நினைவில்கொள்ள வேண்டும். கோபாலபுரம் குடும்பம் நடத்தும் பள்ளிகள் உட்பட சி.பி.எஸ்.இ பள்ளிகளில் முதன்முறையாக பிராந்திய மொழிகளை ஊக்குவிப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இரட்டை நிலைப்பாடு, பாசாங்குத்தனம் போன்றவற்றுக்கு விருது வழங்கப்பட்டால், ஸ்டாலின் அதை வெல்வார்" என்று விமர்சித்திருக்கிறார்.``இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது...!" - அமித் ஷாவுக்கு சு.வெங்கடேசன் பதில்!
http://dlvr.it/StGFhX
Sunday, 6 August 2023
Home »
» இந்தி மொழி விவகாரம்: ``இது 1965 அல்ல என்பதை ஸ்டாலின் நினைவில்கொள்ள வேண்டும்" - அண்ணாமலை சாடல்!