இந்தியா 2023-24-ம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 6.7 சதவிகித வளர்ச்சியடைந்தால் தான் 2030-31-க்குள் 6.7 டிரில்லியன் டாலர் பொருளாதார கனவு சாத்தியமாகும் என ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் குளோபல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ 2022-23-ல் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3.7 டிரில்லியன் டாலராக உள்ளது. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் நாட்டின் மூலதன வருமானம் 2,500 டாலரில் இருந்து சுமார் 4,500 டாலராக உயரும் என மதிப்பீடு நிறுவனம் கூறியுள்ளது. GDP ஆசிரியர் வேலை To பில்லியன் டாலர் கம்பெனி... `பிசிக்ஸ் வாலா' -வின் நம்ப முடியாத வெற்றிக்கதை!
தற்போது சர்வதேச அளவு பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா 26 டிரில்லியன் டாலருடன் முதலிடத்திலும் சீனா 19 டிரில்லியன் டாலருடன் 2-வது இடத்திலும் ஜப்பான் 4.4 டிரில்லியன் டாலருடன் 3-வது இடத்திலும் ஜெர்மனி 4.3 டிரில்லியன் டாலருடன் 4-வது இடத்திலும் இந்தியா 3.7 டிரில்லியன் டாலருடன் 5-வது இடத்திலும் உள்ளன.
கொரோனாவுக்கு பின்னர் உலகளவில் காணப்படும் பொருளாதார சுணக்கம் மற்ற நாடுகளின் வேகத்துக்கு தடையாகியுள்ளது. இதே போல இந்தியாவில் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதும் இந்த சுணக்கத்தின் வேகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இது போன்ற இடர்பாடுகளை அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சரியான முறையில் அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 டிரில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 6 டிரில்லியனாக குறையலாம்.
எனவே தொழில் நடவடிக்கைகளை ஊக்குவித்து அவற்றின் பங்கை அதிகரிக்கும் வகையில் கொள்கைகளை வகுப்பதுடன் உலகச் சந்தையில் போட்டியிடும் அளவில் இந்தியாவின் தனித்தன்மையை அதிகரிக்க வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://dlvr.it/StVQky
Friday, 11 August 2023
Home »
» இந்தியாவின் $6.7 டிரில்லியன் பொருளாதாரக் கனவு சாத்தியமாகுமா..? ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?