தொடங்கியது திமுக-வின் உண்ணாவிரத போராட்டம்!
திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும் ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரதத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எம்.பி தயாநிதிமாறன், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்
சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிவைத்து பேசிய துரைமுருகன், ``நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் பலரும் எதிர்க்கிறார்கள். ஆனால் ஒன்றிய மோடி அரசு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். ஏனென்றால், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு” என்றார்.
அதிமுக மாநாட்டை கொடியேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி தொடங்கி வைத்தார். மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாள் முதலே அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று காலை தொண்டர்கள் வரவேற்ப்புக்கு இடையே எடப்பாடி பழனிச்சாமி மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்து, 51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து மாநாட்டு நிகழ்வினை தொடக்கி வைத்தார்.
அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பினை அளித்தனர். அம்மா பேரவையை சேர்ந்த 4000 தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்த உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கொடியை ஏற்றி வைத்த போது ஹெலிகாப்டர் மூலம் கிட்டத்தட்ட ஒரு டன் ரோஜா மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடக்கும் அதிமுகவின் எழுச்சி மாநாடு என்பதால் இந்த மாநாட்டு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது
மதுரை அதிமுக மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள சாதனை விளக்க கண்காட்சி. #admk #madurai
மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு. நிருபர் : சல்மான் மு. கார்த்தி
வீடியோ: ஈ. ஜெ.நந்தகுமார், என்.ஜி.மணிகண்டன்,ஆர்.எம்.முத்துராஜ்
அதிமுக மாநாடு: தயார் நிலையில் ஏற்பாடுகள்..!
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு:
அதிமுக எழுச்சி மாநாடு மதுரையில் பிரமாண்டமாக இன்று நடைபெற உள்ளது. இன்று காலை கட்சி கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடக்கி வைக்கிறார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிமுக அம்மா பேரவையின் சார்பில் 4 ஆயிரம் தொண்டர்கள் சீருடை அணிந்து எடப்பாடி பழனிசாமிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்துகின்றனர். தொடர்ந்து மாநாட்டில் அதிமுக புகைப்பட கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், இசை கச்சேரி, மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது என பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
10 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன. காலையில் கொடியேற்றிய பிறகு, ஓய்வெடுக்கச் செல்லும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4.30 மணிக்கு மீண்டும் மேடைக்கு வருகிறார். மாலை 6 மணிக்கு தொண்டர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றுகிறார். மாநாடு காரணமாக வலையங்குளம் பகுதிக்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. மேலும், அதிமுக மாநாட்டை ஒட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக உண்ணாவிரத போராட்டம்!
கடந்த வாரத்தில் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி நீட் விலக்கு மசோதா குறித்து பேசும் போது, தான் ஒருபோதும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார். இந்த கருத்து தமிழ்நாட்டில் சர்ச்சையாக வெடித்தது.
இதனை தொடர்ந்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி ஆகிய அணிகள் சார்பில், உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதிமுக மாநாடு நடைபெறும் நாளில் திமுக போராட்டம் அறிவித்ததால், இந்த இரு நிகழ்வுகளும் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. உதயநிதி ஸ்டாலின்
இதனை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் உண்ணாவிரத போராட்டங்கள் மாநில அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் பழங்காநத்தத்தில் உண்ணாவிரதம் இருக்க முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையில் இன்று அதிமுக மாநாடு நடப்பதால், திமுக உண்ணாவிரதம் ஆக.23-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/StvStP
Sunday, 20 August 2023
Home »
» DMK: ``இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். ஏனென்றால்..!” - துரைமுருகன்| Live Updates