`ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்’ என்று 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை, `கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' என்ற பெயரில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான (செப்டம்பர் 15) நேற்று தி.மு.க அரசு நடைமுறைக்கு கொண்டுவந்தது. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து திமுக-வுக்கு வாழ்த்துகள் வந்தபோதும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தி.மு.க-வை விமர்சித்துவருகின்றன.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்
இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாயைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற தி.மு.க-வின் பகல் கனவு பலிக்காது" என விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 99 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும், மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய் வழங்குவதன் மூலம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் வாய்ப்பந்தல் போட்டிருக்கிறார்.
தமிழகத்திலுள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று 2021 தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக தாய்மார்களை ஏங்கவைத்துவிட்டு, இப்போது, பாதிக்கும் குறைவான மகளிருக்கு மட்டும் மாதம் 1,000 ரூபாயை வழங்கி, நாக்கில் தேன் தடவும் வேலையில் இந்த விடியா திமுக அரசு ஈடுபட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனவே, தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, தமிழகத்திலுள்ள அனைத்துக் குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று இந்த விடியா தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.எடப்பாடி பழனிசாமி
ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக மகளிர் உரிமைத்தொகையை வழங்காமல் காலம் தாழ்த்திவிட்டு, தற்போது குறிப்பிட்ட மகளிருக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்குவதன் நோக்கம், விரைவில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலில் மகளிர் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது, நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க அரசின் முதலமைச்சருடைய நப்பாசை எண்ணம்தான். விடியா அரசு பெண்கள்மீது அக்கறைகொண்டு இந்த உரிமைத்தொகையை வழங்கவில்லை என்பதும், நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மகளிரின் வாக்குகளைப் பெறுவதற்காகத்தான் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது என்பதும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
விடியா தி.மு.க அரசு பதவியேற்ற 28 மாத காலத்தில், இரண்டு முறை உயர்த்தப்பட்ட மின்கட்டணம், சொத்து வரி, குடிநீர்க் கட்டணம், பலமுறை உயர்த்தப்பட்ட பால் மற்றும் பால் பொருள்களின் விலை, அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் கடுமையான விலையேற்றம்; குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது. காய்கறிகளின் விலை உயர்வு போன்றவற்றால், அன்றாட வாழ்வில் ஒவ்வொரு குடும்பத்தினரின் மாதச் செலவும் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் வரை கூடியிருக்கிறது.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில், பல சிரமங்களை அனுபவித்துவரும் தாய்மார்களில், பாதிக்கும் குறைவான மகளிருக்கு உரிமைத்தொகையை வழங்குவது திட்டமிட்ட ஏமாற்று வேலை. சிலரை சில நாள் ஏமாற்றலாம், பலரை பல நாள் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லாக் காலங்களிலும் ஏமாற்ற முடியாது என்பதை இந்த பொம்மை முதலமைச்சருக்கு மக்கள் உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY`இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்கும் அமித் ஷா?’ - விடாப்பிடி எடப்பாடி | டெல்லி விசிட் டீடெயில்ஸ்
http://dlvr.it/SwCtwP
Sunday, 17 September 2023
Home »
» மகளிர் உரிமைத்தொகை: ``2024 -ல் மகளிர் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என ஸ்டாலினுக்கு நப்பாசை!" - இபிஎஸ்