மேற்கு வங்க மாநிலம், பங்குரா தொகுதியிலிருந்து மத்திய அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுபாஸ் சர்க்கார். மத்திய கல்வி அமைச்சகத்தில் இணை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில், பங்குராவில் இருக்கும் பா.ஜ.க அலுவலகத்தில், நேற்று மதியம் ஒரு மணியளவில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் அலுவலகத்துக்குள் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, தொண்டர்களின் ஒரு குழு அலுவலகத்தைவிட்டு வெளியேறி, மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்காரை உள்ளே வைத்து அலுவலகத்தைப் பூட்டிவிட்டார்கள்.
With each passing day, @BJP4Bengal is crumbling as infighting is reaching its peak!
In Bankura, vehement clashes erupted, & BJP workers locked Union Minister Subhas Sarkar in the party office.
While unity within the party is a myth, BJP is truly a shining example of a weak… pic.twitter.com/Tu90BpQSZ7— All India Trinamool Congress (@AITCofficial) September 12, 2023
மேலும், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதற்கான காரணம் குறித்து மத்திய அமைச்சருக்கு எதிரானவர்களின் குழுவில் இருந்தவரான மோஹித் ஷர்மா, "கட்சியில் அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எங்களில் சிலர் தீவிரமாக வேலை செய்துவருகிறோம். கட்சியைக் காப்பாற்ற போராட்டம் நடத்துகிறோம். ஆனால், மத்திய அமைச்சரின் திறமையின்மையால் இந்த முறை, பா.ஜ.க-வுக்கு பங்குரா நகராட்சியில் எந்த இடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை.
முந்தைய தேர்தலில் பா.ஜ.க இரண்டு வார்டுகளை வென்றது. தனக்கு நெருக்கமானவர்களை மாவட்டக் குழு உறுப்பினர்களாக ஆக்குகிறார். அவர்களாலும் எந்தப் பயனும் இல்லை" என்றும் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில், மற்றொரு குழு பா.ஜ.க தொண்டர்கள் அந்த இடத்துக்கு வந்தனர். இதில் இரு தரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் பா.ஜ.க அலுவலகத்துக்குச் சென்று அமைச்சரை மீட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்துப் பேசிய பா.ஜ.க மாநிலச் செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, "பா.ஜ.க போன்ற ஒழுக்கமான கட்சியில் இது போன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. சுபாஸ் சர்க்கார்
ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை சரியான இடத்தில் முறையிட வேண்டும். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்காருக்கு மாவட்ட அமைப்பில் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்தக் குழப்பமும், அவர் மீதான குற்றச்சாட்டும் தவறான புரிதலால் வந்தவை" என விளக்கமளித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYG20: ``நாட்டின் 60% மக்களின் தலைவரை பாஜக மதிக்கவில்லை" - அழைக்கப்படாத கார்கே... சாடிய ராகுல்!
http://dlvr.it/Sw1pGZ
Wednesday, 13 September 2023
Home »
» மேற்கு வங்கம்: மத்திய அமைச்சரை அலுவலகத்துக்குள் வைத்துப் பூட்டிய தொண்டர்கள் - காரணம் என்ன?!