டெல்லியில் கடந்த 9,10 ஆகிய தேதிகளில் `G20' மாநாடு நடைபெற்றது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த உலகத் தலைவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அது தொடர்பான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக `பாரதத்தின் குடியரசுத் தலைவர்' எனக் குறிப்பிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதமர் வெளிநாட்டுப் பயண அறிவிப்பிலும், G20 மாநாட்டில் பிரதமர் இருக்கையிலும் `பாரத்' என்றே குறிப்பிடப்பட்டது.விகடன் கருத்துக்கணிப்பு
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ``பா.ஜ.க-வின் நாசகார புத்தியால் மக்களை எப்படிப் பிரிப்பது என்றுதான் சிந்திக்க முடியும். இந்தியர்களுக்கும் பாரதியர்களுக்கும் இடையே மீண்டும் பிளவை உருவாக்குகிறார்கள். நாம் தெளிவாக இருப்போம்... நாம் ஒருவரே. அரசியல் சாசனத்தின் பிரிவு-1, இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் எனக் கூறுகிறது.
இந்தியா கூட்டணியைக் கண்டு அவர்கள் அச்சப்படுவதால், இது போன்ற அற்ப அரசியலைச் செய்கிறார்கள். பிரதமர் மோடி, உங்களால் என்ன முடியுமோ, அதைச் செய்யுங்கள். ஆனாலும், பாரதம் இணையும்... இந்தியா வெல்லும்" எனத் தெரிவித்தார். இந்த நிலையில், நமது விகடன் வலைதளப் பக்கத்தில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிடுவது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தினோம். அதில் சரி என்றும், தவறு என்றும், கருத்து இல்லை என்றும் மூன்று விருப்பத் தேர்வுகளையும் கொடுத்திருந்தோம்.விகடன் கருத்துக்கணிப்பு முடிவு
அதன் முடிவில் இந்தியாவின் பெயரை `பாரத்' என மாற்ற மத்திய அரசு திட்டமிடுவது.... சரி என 25 சதவிகித வாசகர்களும், தவறு என 68 சதவிகித வாசகர்களும், கருத்து இல்லை என 7 சதவிகித வாசகர்களும் வாக்களித்திருக்கிறார்கள்.
இதேபோல் விகடன் வலைதளப் பக்கத்தில் தற்போது நடந்துவரும் கருத்துக்கணிப்பில், ``தி.மு.க ஆட்சியில் போதைப்பொருள்கள் பயன்பாடு, கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, அதிகரித்திருப்பாக எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் குற்றச்சாட்டு" குறித்த உங்களின் கருத்தை தெரிவிக்க
https://www.vikatan.com/ இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.`ஒரே நாடு, ஒரே தேர்தல்': `தேவையா... தேவையில்லையா?' - மக்கள் கூறுவதென்ன? | விகடன் கருத்துக்கணிப்பு
http://dlvr.it/Sw4Zvg
Thursday, 14 September 2023
Home »
» `இந்தியாவின் பெயரை `பாரத்' என மாற்ற திட்டமிடுவது சரியா?' - விகடன் கருத்துக்கணிப்பு முடிவு