``மலைவாழ் சமுதாயம் மற்றும் கணவனை இழந்தவர் (Widow) என்பதால், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்கவில்லை. இதுதான் சனாதனம்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.வெள்ளி செங்கோல் வழங்கிய பி.மூர்த்தி
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மேலூரில் நடந்த கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ``திராவிட மாடல் தி.மு.க அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
கடந்த மாதம் மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. அது என்ன மாநாடு என்று உங்களுக்குத் தெரியும். அதில் புளியோதரை நன்றாக இருந்ததா... பொங்கல் நன்றாக இருந்ததா என்று பேசியிருக்கிறார்கள். ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் 32 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றனர். ஆனால், நீட் தேர்வு ரத்து குதித்து தீர்மானம் ஏதும் நிறைவேற்றவில்லை. ஆனால், அதே நாளில் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. ஒரு மாநாடு எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது அ.தி.மு.க மாநாடு. ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு டிசம்பரில் நடத்தவிருக்கும் தி.மு.க இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு இருக்கும்.உதயநிதி ஸ்டாலின்
மதுரை மக்கள் அன்புக்கும், வீரத்துக்கும் பெயர் போனவர்கள். மதுரையில்தான் தி.மு.க-வின் இளைஞரணி தொடங்கப்பட்டது. தி.மு.க மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்க விதை விதைத்தவர் அமைச்சர் மூர்த்தி. மதுரைக்கு உயர் நீதிமன்றம், சர்வதேச விமான நிலையம் எனப் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தவர் கலைஞர். அதேபோல் மதுரைக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு மைதானத்தைக் கொண்டுவந்தவர் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க இளைஞரணி 2-ம் மாநாடு மதுரையில் நடத்த வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கோரிக்கை விடுத்தார். ஆனால், முதல்வர் சேலத்தில் நடத்த உத்தரவிட்டார்.
உண்மையான பாசத்துடன் அண்ணன் என அமைச்சர் மூர்த்தியை அழைக்கிறேன். எனக்கு உடன்பிறந்த அண்ணன் இருந்தால் என்னை எப்படிக் கவனித்துக்கொள்வாரோ, அதைப்போல அமைச்சர் மூர்த்தி என்னைக் கவனித்துக்கொள்கிறார். (உதயநிதி பேசியதைக் கேட்டு அமைச்சர் மூர்த்தியின் கண்களில் கண்ணீர்).உதயநிதி ஸ்டாலின்
`நீட் தேர்வு ரத்து குறித்த ரகசியத்தை என்னிடம் கேளுங்கள்' என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் எனும் ரகசியத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுவாரா?
நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து பெறும் நிகழ்ச்சியை ஒரு வாரத்தில் தொடங்கவிருக்கிறோம். இந்த இயக்கத்துக்கு ஆர்.பி.உதயகுமார் ஆதரவு தெரிவித்து கையெழுத்து போடுவாரா... அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து மாறி மாறி பேசிக்கொள்வது அவர்களுடைய உட்கட்சி பிரச்னை. தற்போது பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி பற்றி அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் யாரும் பேசவில்லை, மாறாக தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். வெள்ளி செங்கோல் வழங்கிய பி.மூர்த்தி
நான் சனாதனம் குறித்து பேசிய கருத்து திரித்து வெளியிட்டப்பட்டிருக்கிறது. தற்போது சாமியார்கள் என் தலைக்கு 10 கோடி, 50 கோடி என விலை வைக்கின்றனர். நான் கலைஞர் வழியிலிருந்து வந்தவன், தி.மு.க-க்காரன், இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். சனாதானத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம்தான் தி.மு.க. சனாதனத்தை ஒழிக்கும் வரை நாம் போராட வேண்டும்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில், மலைவாழ் சமுதாயம் மற்றும் கணவனை இழந்தவர் (Widow) என்பதால்தான் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவர்கள் அழைக்கவில்லை. இதுதான் சனாதானம். இதைத்தான் நாம் ஒழிக்க வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க-வினர் கடுமையாக உழைக்க வேண்டும். பிரதமர் மோடி எங்கே சென்றாலும் என்னைப் பற்றியும், முதல்வர் குறித்தும் பேசிவருகிறார்.
மோடி ஒன்பதரை ஆண்டுகளில் என்னத்தைக் கிழித்திருக்கிறார் எனத் தெரியவில்லை. சாலை, காப்பீடு என அனைத்திலும் பா.ஜ.க அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறது. பா.ஜ.க அரசால் வாழும் ஒரே குடும்பம் அதானி குடும்பம் மட்டுமே. அதானிக்காக பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற தி.மு.க-வினர் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தமிழகத்திலிருந்து பா.ஜ.க எனும் பாம்பை ஒழிக்க வேண்டும் என்றால், அ.தி.மு.க எனும் குப்பையை அகற்ற வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY``அதிமுக-போல் பல அணிகளாக இல்லாமல், `இந்தியா' கூட்டணிபோல வாழுங்கள்!" - மணமக்களை வாழ்த்திய உதயநிதி
http://dlvr.it/SwQCBf
Thursday, 21 September 2023
Home »
» ``பிரதமர் எங்கே சென்றாலும் என்னைப் பற்றியும், முதல்வர் குறித்தும்தான் பேசிவருகிறார்'' - உதயநிதி