மதுரை மாவட்டம், செல்லம்பட்டியில் ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், "மகளிருக்காக எத்தனை திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்தாலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த `தொட்டில் குழந்தை’ திட்டம், `தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்’போல எந்தத் திட்டமும் இல்லை.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
அன்று கருணாநிதி அறிவித்த 2 ஏக்கர் நிலம்போல, இன்று மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்.
தினசரி வரும் செய்திகளைப் பார்த்தால், தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில் கடந்த ஐந்து நாள்களாக மகளிர் அலைவதும், இணையதளம் வேலை செய்யவில்லை என்பதும்தான் செய்தியாக இருக்கிறது.ஆர்.பி.உதயகுமார்
முட்டாள்தனமாக 60 லட்சம் மனுக்களைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர். வருமான வரம்பு அதிகம் என தள்ளுபடி செய்திருக்கின்றனர்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திலுள்ள விதிமுறைகளில் தளர்வுகளைக் கொண்டுவர வேண்டும்.
அதை விடுத்து புதிய மனுக்களைக் கொடுக்கச் சொல்கின்றனர். ஆனால், ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களின் நிலை என்ன எனத் தெரியவில்லை. இப்படியே தள்ளுபடி செய்துகொண்டே போனால் விரைவில் திமுக-வை இந்த மக்கள் தள்ளுபடி செய்துவிடுவார்கள்.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்
தகுதி உள்ளவர்களை அடையாளம் கண்டு, உச்சவரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும். அதை விடுத்து உச்சவரம்பை நிர்ணயம் செய்துவிட்டு, தகுதி உள்ளவர்களைத் தேடுகின்றனர்.
பூத் கமிட்டி உறுப்பினர்களைச் சந்திக்க எடப்பாடியார் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரடி ஆய்வுசெய்யவிருக்கிறார். அவர் வரும்போது அனைவரும் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
http://dlvr.it/SwX7xy
Sunday, 24 September 2023
Home »
» "மனுக்களை தள்ளுபடி செய்துகொண்டே போனால், திமுக-வை மக்கள் தள்ளுபடி செய்வார்கள்!" - ஆர்.பி.உதயகுமார்