சனாதன விவகாரம் தொடர்பாக பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில், மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசிய கருத்து, அ.தி.மு.க-வினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. அண்ணாமலையின் தொடர்ச்சியான கருத்துகளால் பலமுறை அவரை அ.தி.மு.க கண்டித்து வந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை. இதுவே கட்சியின் நிலைப்பாடு. அண்ணாமலைக்கு தலைமைக்கான தகுதியே இல்லை" என்று செப்டம்பர் 18-ம் தேதி கூறியிருந்தார்.ஜெயக்குமார் - அண்ணாமலை - பாஜக - அதிமுக
அதன் பிறகு கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை என இரு தரப்பிலிருந்தும் பேச்சுகள் வந்தன. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்த வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் டெல்லிக்கு விரைந்து, இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தலைவர்களிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று கூறியதில் எந்த மாற்றமும் இல்லை என ஜெயக்குமார் தற்போது தெரிவித்திருக்கிறார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ஜெயக்குமார், ``18-ம் தேதி எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
நாளை கட்சிக் கூட்டம் நடைபெற இருப்பதால் இதற்கு மேல் கூறுவது சரியாக இருக்காது" என்று கூறினார். மேலும், வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் டெல்லிக்குச் சென்றது குறித்த கேள்விக்கு, ``நாட்டு நலன் குறித்து பேச டெல்லிக்குச் சென்றனர்" என ஜெயக்குமார் தெரிவித்தார்.`மோதல்... முறிவு?' - அனல் கிளப்பிய அண்ணாமலை... `திடீர்' மா.செ கூட்டம்... எடப்பாடியின் அடுத்த மூவ்!
http://dlvr.it/SwYrNW
Monday, 25 September 2023
Home »
» ``பாஜக-வுடன் கூட்டணி முறிவு; நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை!" - ஜெயக்குமார் திட்டவட்டம்