விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில், அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதைத் தொடர்ந்து அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "இந்தியா கூட்டணியில் ஆரம்பத்தில் 16 கட்சிகள் இருந்தன. தற்போது 28 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இன்னுமும் ஏராளமான கட்சிகள் வந்து சேரவுள்ளன. பிரதமர் மோடி ஆட்சி அமைத்து ஒன்பது ஆண்டுக்காலத்தில் எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.திருமண நிகழ்வு
நரேந்திர மோடி தலைமையிலான இந்த ஆட்சி, ஒரு சர்வாதிகார ஆட்சி. இது ஒரு பாசிச ஆட்சி, இது அகற்றப்பட வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்தியா என்ற கூட்டணி உருவாகியிருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் கபட நாடகம். இந்திய வரலாற்றில் குடியரசுத் தலைவராக பதவி ஓய்வு பெற்றவர்கள் வேறு எந்த பதவிக்கும் வந்தது கிடையாது. அதை உடைக்கும் பொருட்டு ராம்நாத் கோவிந்த் இந்த பொறுப்பை ஏற்றிருக்கக் கூடாது.சிபிஐ முத்தரசன்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இவர் சுயமாக முடிவெடுக்கும் நிலையிலும் இல்லை. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. பொருத்தமானவர் நாட்டின் பிரதமராக நிச்சயம் வருவார். ஆனால் மோடி நிச்சயமாக பிரதமராக வர மாட்டார். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி வருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஒருபோதும் கூறியதில்லை. இந்தியா கூட்டணி நினைத்தால் நான்கூட அடுத்ததாக பிரதமராகலாம்" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY``அண்ணாமலை யாத்திரையுடன் தமிழகத்தில் பாஜக சரித்திரம் முடிவுக்கு வரும்!"- முத்தரசன் காட்டம்
http://dlvr.it/SvbLf5
Monday, 4 September 2023
Home »
» `` `இந்தியா' கூட்டணி நினைத்தால், நான்கூட பிரதமராகலாம்!" - சொல்கிறார் சி.பி.ஐ முத்தரசன்