டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் (செப்டம்பர் 9, 10) இந்தியா தலைமையில் 18-வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதன் காரணமாக டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக பலப்படுத்தப்படுகின்றன. இன்னொரு பக்கம், ஜி 20 அமைப்பிலிருக்கும் உலக நாடுகளின் அதிபர்களும், பிரதிநிதிகளும் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றனர்.ரிஷி சுனக் - மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே
அந்த வரிசையில், இங்கிலாந்தின் பிரதமரான இந்திய வம்சாவளி ரிஷி சுனக், தன் மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது, ரிஷி சுனக்கையும், அக்ஷதா மூர்த்தியையும், ``ஜெய் சியா ராம்" என்று மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே வரவேற்றார். அதோடு, ருத்ராட்சம் மற்றும், பகவத் கீதை, அனுமன் சாலிசா புத்தகத்தையும் இருவருக்கும் பரிசாக வழங்கினார் அஷ்வினி குமார் சௌபே.
அதைத் தொடர்ந்து காலிஸ்தான் விவகாரம் குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய ரிஷி சுனக், ``இதுபோன்ற எந்த வகையான தீவிரவாதம் அல்லது வன்முறையையும் இங்கிலாந்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான், காலிஸ்தான் சார்பு தீவிரவாதத்தை சமாளிக்க இந்திய அரசுடன் மிகவும் நெருக்கமாக நங்கள் பணியாற்றி வருகிறோம்.ரிஷி சுனக்
இந்த வகையான தீவிரவாதத்தை வேரறுக்க, உளவுத்துறை மற்றும் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படும் குழுக்களைக் கொண்டிருக்கிறோம். இதனை இங்கிலாந்தில் நான் பொறுத்துக் கொள்ளமாட்டேன்" என்று கூறினார்.
முன்னதாக, லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பதும், இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லி மெட்ரோ நிலைய சுவர்களில் `டெல்லியை காலிஸ்தானாக மாற்றுவோம்', `காலிஸ்தான் ஜிந்தாபாத்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.``பிரதமராக அல்ல, ஓர் இந்துவாக இங்கு நிற்கிறேன்!" - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் ரிஷி சுனக்
http://dlvr.it/SvrTks
Saturday, 9 September 2023
Home »
» G20: மனைவியுடன் இந்தியா வந்திறங்கிய ரிஷி சுனக்; `ஜெய் சியா ராம்' என்று வரவேற்ற மத்திய அமைச்சர்!