தமிழக அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்த உத்தரப்பிரதேச சாமியார்
பரமஹம்ச ஆச்சார்யாவின் உருவ பொம்மை எரிப்பு.பா.ஜ.க மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், பால் கனகராஜ் மற்றும் அந்தக் கட்சியினர், ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து புகார் மனு அளித்த பின்பு, செய்தியாளர் சந்திப்பு.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் தயார் நிலையில் இருக்கும் விநாயகர் சிலைகள்.கோகுலாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் கிருஷ்ணசுவாமி கோயில் ரதவீதிகளில் கோகுலாஷ்டமி சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை ஊட்டியில் போலீஸார் கைதுசெய்தனர். விலைவாசி உயர்வைக் கண்டித்து தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஈரோடு மாவட்டம், கீழ்பவானி வாய்க்காலில் சட்டர்களை உடைத்து தண்ணீர் திருடியவர்களையும், வடிகால் பாலத்தைச் சேதப்படுத்தியவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த விவசாயிகள்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.புதுச்சேரிக்கு வந்த பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜாவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்றார்.திருநெல்வேலி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாளையங்கோட்டையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெற்றிலை விவசாயிகளிடம் வழங்கினார். புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியதை அடுத்து, அ.தி.மு.க-வினர் துணைநிலை ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து நன்றி கூறினர். Health walk திட்டத்தின்கீழ் தேனியில் அதிகாலையில் அமைச்சர் நடைப்பயணம் மேற்கொண்டார்.திருநெல்வேலி:
சர்வதேச தூய காற்று தினத்தை முன்னிட்டு, உதவி ஆட்சியர் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கான புதிய லோகோவை இந்திய கப்பல் போக்குவரத்து செயலர் ராமச்சந்திரன் வெளியிட்டார். கடலூரில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடிகர் தாமு தலைமையில் நடைபெற்றது. சேலத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
http://dlvr.it/Svnxsz
Friday, 8 September 2023
Home »
» இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் | நடிகர் தாமுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி - News In Photos