``என்னுடைய மிகப்பெரும் சக்தி என் மனைவி துர்கா!'' - ஸ்டாலின்
தமிழக மக்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், ``என்னுடைய சரிபாதி என் மனைவி துர்கா அவர்கள். என் வாழ்வில் எத்தனையோ மேடு பள்ளங்கள் இருந்திருக்கின்றன. எல்லா நேரங்களிலும் எனக்கு உற்ற துணையாக, என்னுடைய மிகப்பெரும் சக்தியாக இருப்பது என் மனைவிதான்.
கருணை மிகுந்த தாய். தூணாக விளங்கும் மனைவி. தன்னம்பிக்கை கொண்ட மகள். இந்த மூன்றும் எனக்கு கிடைத்திருக்கிறது. நான் மிகவும் கொடுத்து வைத்தவன். இதே போன்ற பேருள்ளம் கொண்டவர்கள்தான் மகளிர் அனைவரும்'' என்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்:
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தி.மு.க தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல், இந்தத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட, புதுச்சேரியிலும், கர்நாடகாவிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட, தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
இந்த நிலையில்தான் இந்தத் திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பின்னர், `தகுதியான பெண்கள் என கணக்கெடுக்கப்பட்டு, இந்தத் திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.முதலமைச்சர் ஸ்டாலின்
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக 10,000 பயனாளிகள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களும் விழாவில் பங்கேற்கின்றனர். சென்னையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கிவைக்கிறார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோடம்பாக்கத்திலும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கொளத்தூரிலும் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்கள். மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
http://dlvr.it/Sw7K55
Friday, 15 September 2023
Home »
» Tamil News Today Live: ``என்னுடைய மிகப்பெரும் சக்தி என் மனைவி துர்காதான்!'' - காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு