காவிரி விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள்!
காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வலியுறுத்தி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் மனு அளிக்க இருக்கின்றனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
திமுக எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் நிலையில், கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது!சீமான் மீது கொடுத்த புகாரை நள்ளிரவில் திரும்பப் பெற்றார் நடிகை விஜயலட்சுமி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தன்னைத் திருமணம் செய்து சீமான் ஏமாற்றிவிட்டதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சீமான் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி போலீஸார் இரு முறை சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், சீமான் ஆஜராகாமல் இருந்துவந்தார்.
இந்த நிலையில் விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்து, புகார் மனுவைத் திரும்பப் பெறுவதாக எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்தார்.
அப்போது பேட்டி அளித்த அவர் ``இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூருக்குச் செல்கிறேன். யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. சீமானிடம் பேசினேன். வழக்கை வாபஸ் பெற்று விட்டேன்’’ எனக் கூறினார்.
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!
என்.ஐ.ஏ
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுவருகிறார்கள். குறிப்பாக உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக இந்தச் சோதனை நடைபெற்றுவருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சென்னையில் திரு.வி.க நகரிலுள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றுவருகிறது. கோவையில் மட்டும் 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகிறார்கள். குறிப்பாக, உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜி.எம்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றுவருகிறது.
http://dlvr.it/Sw9whj
Saturday, 16 September 2023
Home »
» Tamil News Today Live: காவிரி விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள்!