சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். ஜாமீன் கோரி ஏற்கெனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தற்போது மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு, இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையைக் குறிப்பிட்டு வாதிட்டார்.
அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், நீதிமன்றமே எந்தவொரு மருத்துவரையும் நியமித்து செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
வேலை பெற்று தருவதாகக் கூறி 1.34 கோடி ரூபாய் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் 10 ஆண்டுகளில் அவருடைய வங்கிக் கணக்குகளையும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததிலிருந்தே செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என்பது நிரூபணமாவதாகக் குறிப்பிட்ட அவர், உள் நோக்கத்துடன் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 67.75 கோடி ரூபாய் பணம் பெற்றிருப்பது, தற்போது தெரிய வந்திருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் எனவும், செந்தில் பாலாஜிக்கு அது போன்ற நிலை ஏற்படவில்லை எனவும் வாதிட்டார். மேலும், செந்தில் பாலாஜியின் கால் மரத்துபோவது சமீபத்தில் ஏற்பட்டது அல்ல எனவும் அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்தப் பிரச்னை இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றம் - செந்தில் பாலாஜி
மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கெனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் எனக் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், அவர் காட்சிகளை கலைத்துவிடுவார் எனவும் வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா... செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியைக் கலைப்பார் என அமலாக்கத்துறை கூறுகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன, என கேள்வி எழுப்பினார்என்.ஆர்.இளங்கோ
செந்தில் பலாஜி தரப்பில், அவர் நிச்சயமாக ஆதாரங்களை கலைக்க மாட்டார். ஆதாரங்களை கலைக்க செந்தில் பாலாஜி முயலக்கூட மாட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத்துறையிடம் இருக்கும்போது, அவற்றைக் கலைக்க முடியாது எனத் தெரிவிக்கபட்டது. இதய அறுவை சிகிச்சை சாதாரணமானது என அமலாக்கத்துறை கூறுகிறது என்றும், ஆனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தால் இதேபோல கூறுவார்களா எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம்
இந்த வழக்கில், செந்தில் பாலாஜி குற்றம் செய்தார் என்பதை அமலாக்கத்துறையால் நிரூபிக்கவே முடியாது. அமலாக்கத்துறை தரப்பில், சிறை மருத்துவமனையிலோ அல்லது நீதிமன்றக் காவலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்ற நிலை இருந்தால் மட்டுமே, மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியும். ஆனால், அது போன்ற நிலை செந்தில் பாலாஜிக்கு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில், ஓர் இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, உட்காரவோ செந்தில் பாலாஜியால் முடியவில்லை எனக் கூறுகிறார்கள் என்றும், ஆனால் அவ்வாறு அவர் உட்கார்ந்து இருக்க வேண்டுமென யாரும் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
"நீங்கள் ஏன் பாஜக-வில் இணையக் கூடாது எனக் கேட்டிருக்கின்றனர்" - செந்தில் பாலாஜி வழக்கில் கபில் சிபல்
http://dlvr.it/SxXzvh
Tuesday, 17 October 2023
Home »
» `செந்தில் பாலாஜி ரூ.67 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது!' - ED | ஹைகோர்ட்டில் அனல்பறந்த விவாதம்