சர்ச்சையில் சிக்கியிருக்கும் சூதாட்ட மொபைல் ஆப் உரிமையாளர் சவுரப் சந்திராகர், துபாயில் நடந்த தனது திருமணத்துக்கு ரூ.200 கோடி செலவு செய்தது குறித்தும், பண மோசடி குறித்தும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் திருமணத்தில் கலந்துகொண்ட பாலிவுட் பிரபலங்கள் இப்போது அமலாக்கப் பிரிவின் விசாரணையில் சிக்கியிருக்கின்றனர். சவுரப் சந்திராகரும், அவரின் கூட்டாளியும் தற்போது துபாயில் இருக்கின்றனர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இரண்டு பேரும் மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது.அமலாக்கத்துறை
காலி நிலம், பங்களா மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்கான பிளாட்கள் என ஏராளமான சொத்துகளை பினாமி பெயரில் வாங்கியிருப்பதை, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அவற்றின் பினாமிகள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மும்பை புறநகர்ப் பகுதியில் ரிசார்ட் வசதியுடன்கூடிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்று கட்டவும் அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர் என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கான நிலத்தை அடையாளம் காண, மும்பையில் பிரபலமான நில தரகர் ஒருவரையும் செளரப் நியமித்திருந்திருக்கிறார்.
இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் பேசுகையில், ''அந்த சூதாட்ட மொபைல் ஆப் உரிமையாளர்கள் மும்பையில் நட்சத்திர ஹோட்டல் கட்ட திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக நிலம் வாங்க அவர்கள் தொடர்பிலிருந்த தரகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சூதாட்ட மொபைல் ஆப் உரிமையாளர்களுக்கு நாடு முழுவதும் சொத்துகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவை அடையாளம் காணப்பட்டவுடன், அந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். ஆப் உரிமையாளர்கள் நாடு முழுவதும் சொத்துகள் வாங்க, அவர்களின் மொபைல் ஆப் கிளை ஆப்ரேட்டர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். சூதாட்டத்தில் கிடைக்கும் பணத்தில் 70 சதவிகிதத்தை ஹவாலா முறையில் மொபைல் ஆப் உரிமையாளர்களுக்கு அனுப்புவது வழக்கம்.
சில நேரங்களில் தங்களது பங்கு பணத்தை சொத்தில் முதலீடு செய்துவிடும்படி, ஆப் உரிமையாளர்கள் சொல்லிவிடுகின்றனர். கிளை ஆப்ரேட்டர்கள் மும்பை, டெல்லி உட்பட நாடு முழுவதும் 4,000-க்கும் அதிகமானோர் இருக்கின்றனர். சவுரப்
அவர்களை அடையாளம் காணும் பணி தற்போது நடந்து வருகிறது. ஒவ்வொரு கிளை ஆப்ரேட்டரிடமும் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்" என்றார்.
சவுரப்பின் துபாய் திருமணம் மற்றும் பார்ட்டிகளில் கலந்துகொண்ட பாலிவுட் பிரபலங்களுக்கு அமலாக்கப் பிரிவு ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், எஞ்சியவர்களுக்கும் சம்மன் அனுப்ப திட்டமிட்டிருக்கிறது. இதனால் சன்னி லியோன் உட்பட பாலிவுட் பிரபலங்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அதோடு அவர்கள் சூதாட்ட ஆப் உரிமையாளர்களிடம் பெற்ற பணத்தைப் பறிமுதல் செய்யக்கூடும் என்ற அச்சமும், பாலிவுட் பிரபலங்களை தொற்றிக்கொண்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
Sanjay Dutt: சூதாட்ட ஆப் விவகாரம்; சஞ்சய் தத், சுனில் ஷெட்டிக்கு அமலாக்கப் பிரிவு குறியா?
http://dlvr.it/SxNJWM
Friday, 13 October 2023
Home »
» `சூதாட்ட மொபைல் ஆப் நடத்தி, ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் கட்ட திட்டமிட்டனர்!'- தகவல்கள் பகிரும் அமலாக்கத்துறை