சேலம் மாவட்டம், அழகாபுரம் காட்டூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சிவாய நகர். இந்தப் பகுதியில் பொதுவாகவே மழைக்காலங்களில் கழிவுநீர் மழைநீரோடு சேர்ந்து சாலையிலும், தெருக்களிலும் தேங்கி நிற்கும். இது குறித்து பொதுமக்களின் தொடர் வேண்டுகோளால் அழகாபுரம் காட்டூர் மெயின் ரோட்டில் கழிவுநீர் சீராகச் செல்ல சிறிய பாலம் கட்டும் பணி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் பாலம் கட்டுவதற்காக ஏற்கெனவே இருந்த சாக்கடை கால்வாய் உடைக்கப்பட்டு, அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அதற்குப் பிறகு பணிகள் நாளுக்கு நாள் மந்தமடைந்து கொண்டே போனது.சேலம்
அதன் விளைவாக, தெருக்களின் இரு புறமும் உள்ள குறுகிய கால்வாயிலிருந்து வரும் சாக்கடை நீர், முதன்மை கால்வாயோடு சேர முடியாமல் கழிவு நீர் அனைத்தும் சிவாயநகர் சாலையில் நிரம்பி வழிந்து 20 நாள்களுக்கும் மேலாக தெருவில் தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி என பல அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும், பாலம் கட்டும் பணிகள் தீவிரமடையாமல் கிடப்பிலேயே இருந்தது. இதனால், நீர் மூலம் பரவும் நோய்க் குறித்து மக்கள் கொள்ளும் அச்சத்தையும், பள்ளிக்குச் செல்லும் சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள், கர்ப்பிணிகள் உட்பட பலரும் சாலையில் நடக்க முடியாமல் அல்லல்படுவதையும், நேரடியாக சிவாயநகருக்குச் சென்று மக்களிடம் பேசி அந்தப் பகுதியின் அவலநிலை குறித்து, செப்டம்பர் 6-ம் தேதி ஜூனியர் விகடனில் செய்தியாகவும், முகநூல் பக்கத்தில் லைவாகவும் வெளியிட்டிருந்தோம்.சேலம்:`சாக்கடை நிரம்பி வழியுது, நடக்கவே முடில'; சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி!
இதன் எதிரொலியாக, சேலம் மாநகராட்சியினர் தற்போது, உடைக்கப்பட்ட முதன்மை சாக்கடையை ஜேசிபி உதவியுடன் தூர்வாரி கம்பிகள் கொண்டு தற்காலிகமாக சிறுபாலம் அமைத்தனர். அதன்பின், சாலையில் தேங்கிய கழிவு நீர் வடிந்து காய்வதற்கு ஒரு வார காலம் காத்திருந்து, தெருக்களின் இருபுறமும் கழிவு நீர் சீராகச் செல்ல வழி செய்யப்பட்டு, தற்காலிக பாலம் மீது சிமென்ட் அடுக்குகளை அமைத்து பணிகளை முடித்தனர். பொதுமக்களின் துயருக்குத் தற்காலிக தீர்வும் கிடைத்திருக்கிறது.சேலம்
இதையடுத்து பொதுமக்கள், ``மெயின் ரோட்டுல போற சாக்கட ஃப்ரீயா போகும். ஏன்னா அங்கெல்லாம் பாலம் கட்டிட்டாங்க. இப்போ இங்க என்ன பண்ணிட்டாங்கன்னா, தெருவோட ரெண்டு பக்கம் இருக்கிற குறுகிய சாக்கடைய, புதுசா பாலம் கட்டன பெரிய சாக்கடையோட சேர்த்துட்டாங்க. அதனால கழிவுநீர் தேங்குறதில்ல. ஆனா, குறுகிய சாக்கடையில இருக்கிற குப்பைங்க, மண்ணு, கழிவுங்க இதெல்லாத்தையும் முழுசா தூர்வாராமலே போயிட்டாங்க. தூர்வாருன குப்பையையும் அல்லாம அப்படியே விட்டுட்டாங்க. குப்பைய முழுசா எடுத்தாதான் இனி நிரந்தரமா சாக்கடை நீர் தேங்காது, கொசு உற்பத்தியும் அதிகரிக்காது. தற்காலிகமா எங்களுக்குத் தீர்வு கிடைச்சிடுச்சி. இருந்தாலும், மாநகராட்சி இந்த குப்பையை முழுசா எடுத்து எங்களுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கணும்" என்று சேலம் மாநகராட்சிக்குக் கோரிக்கை வைக்கின்றனர். ‘ஸ்பா’க்களில் களைகட்டும் பாலியல் தொழில்... சேலம் திகுதிகு! - பின்னணியில் காவல் அதிகாரிகள்?
http://dlvr.it/Swsp7W
Monday, 2 October 2023
Home »
» சேலம்: சாலையில் தேங்கிய சாக்கடை கழிவுநீர்... செய்தி வெளியிட்ட விகடன்; விரைந்து சீரமைத்த மாநகராட்சி!