சேலம் மாநகரக் காவல்துறைக்குக்கீழ் 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருந்துவருகின்றன. இதில், மகளிர் காவல் நிலையமும் அடக்கம். இந்த நிலையில், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் பொறுப்பாளராக இன்ஸ்பெக்டர், உதவி ஆணையர் என்று இருந்தாலும், காவல் நிலையங்களில் நடக்கக்கூடிய நேரடி விஷயங்களையும், மறைமுக விஷயங்களையும் மாநகர காவல் ஆணையரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது நுண்ணறிவுப் பிரிவு எனும் ஐ.எஸ் `இன்டெலிஜென்ஸ் செக்ஷன்'தான். இந்தப் பிரிவு, மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் இயங்கிவருகிறது.சேலம் மாநகர் காவல்துறை - டிஜிபி
இந்த நுண்ணறிவுப் பிரிவை தமிழகமெங்குமுள்ள மாநகர காவல்துறையில் கொண்டு வந்ததற்கான காரணமே, ஒவ்வொரு காவல் நிலையத்திலுமிருந்து வரக்கூடிய தகவல்கள் சரியாக வருவதில்லை. குற்றச் சம்பவங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை, தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பிரிவு கொண்டுவரப்பட்டது.சீனிவாசன்
இதற்கென தனி உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்குக்கீழ் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஐ.எஸ் என்ற காவலர்கள் மஃப்டியில் இருந்துகொண்டு, தகவல்களைச் சேகரித்து அனுப்புவார்கள். இந்த நிலையில், சேலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கண்ட ஐ.எஸ் பிரிவில் இன்ஸ்பெக்டர் பதவி நிரப்பப்படாமல் இருந்துவந்தது. இது தொடர்பாக ஜூ.வி இணையத்தில், ``மூன்று ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் பதவி; என்ன சொல்கிறார்கள் உயரதிகாரிகள்?” என்கிற செய்தியை காவல்துறை உயரதிகாரிகளின் விளக்கங்களுடன் வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தியின் எதிரொலியாக தற்போது ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் பதவி நிரப்பப்பட்டிருக்கிறது. இந்தப் பணியிடத்துக்கு சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சீனிவாசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். Exclusive: 3 ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் பதவி; என்ன சொல்கிறார்கள் உயரதிகாரிகள்?
http://dlvr.it/SxhnNl
Friday, 20 October 2023
Home »
» சுட்டிக்காட்டிய விகடன்; சேலம் மாநகரக் காவல்துறையில், ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்!