ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில், மகாத்மா காந்தி பிறந்ததினத்தை முன்னிட்டு, ஊராட்சிக்குட்பட்ட கங்காகுளம் கிராமத்திலுள்ள கோயிலில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, ஊராட்சித் தலைவர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேப்பங்குளத்தைச் சேர்ந்த அம்மையப்பன் எனும் விவசாயி பங்கெடுத்துப் பேசினார். அப்போது, "ஊராட்சியிலுள்ள கிராமங்களில் சுழற்சிமுறையில் கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என, உள்ளாட்சித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.எம்.எல்.ஏ தலைமையில் கிராமசபைக் கூட்டம்!
ஆனால் கடந்த முறை நடந்த அதே இடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது மீண்டும் அதே இடத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதனால் பிற கிராமங்களிலுள்ள பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க முடியாமல் சிரமத்துக்காளாகின்றனர்" எனத் தன் கருத்தை முன்வைத்தார். அப்போது இதற்கு பதிலளித்த ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன், ``கடந்த கூட்டம் நடந்தபோது, நீ ஏன் வரவில்லை?" என ஒருமையில் எதிர்க் கேள்வியெழுப்பினார்.தங்கபாண்டியன்
தொடர்ந்து அம்மையப்பன் பேசுகையில், ``சுற்றுவட்டத்தில் 13 கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் எங்கு நடைபெறும் கூட்டத்தில் வேண்டுமானாலும் பங்கெடுக்கலாம். கூட்டத்தில் நான் ஏதும் தவறாகக் கேட்கவில்லை. எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், நிராகரிக்கப்பட்டது எனத் தெரிவித்திவிடுங்கள்" எனச் சொல்லிவிட்டு தனது அடுத்தக் கேள்வியை முன்வைத்தார். அதில், ``ஆகஸ்ட் 17-ம் தேதி ஊராட்சித் தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவுக்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் நிர்வாகம், ஊராட்சிச் செயலர் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்மீது எடுத்த நடவடிக்கை என்ன?" என `பரபர' கேள்வியை முன்வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன், ஓடி வந்து தரையில் அமர்ந்திருந்த அம்மையப்பன் நெஞ்சில் காலால் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. அவரின் ஆதரவாளர்களும், விவசாயி அம்மையப்பனைக் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.சமாதானம்
அந்தக் காணொளியில், "நான் நீதிமன்ற உத்தரவு பெற்று பணியில் தொடர்கிறேன். என்னைப் பற்றி இவன் எப்படிப் பேசலாம்" என்று மரியாதைக் குறைவான வார்த்தைகளால் விவசாயி அம்மையப்பனை வசைபாடுவதும் பதிவாகியிருக்கிறது. இதனால் கிராமசபைக் கூட்டமே கலவரக் களமானது. அப்போது ஏற்பட்ட நிலைமையைச் சரிசெய்ய மான்ராஜ் எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் முயன்றனர். விவசாயி அம்மையப்பனுக்கு ஆதரவாக, 'புகார் அளித்தவரை எப்படித் தாக்கலாம்?' என்று கூறி, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிச் செயலர் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து கிராமசபைக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, காயமடைந்த விவசாயி அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். அவர் வன்னியம்பட்டி போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் தங்கபாண்டியன் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர். கிராமசபைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ., பி.டி.ஓ மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், கேள்வி கேட்ட விவசாயியை, ஊராட்சிச் செயலர் காலால் எட்டி உதைத்த சம்பவம், விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
`அந்த குளுக்கோஸ் ஆலையால் ஏற்படும் மாசுபாட்டால் நாங்கள்..’ - கிராமசபை கூட்டத்தில் கவனம்பெற்ற மாணவி
http://dlvr.it/SwwL6b
Tuesday, 3 October 2023
Home »
» கேள்வியெழுப்பிய விவசாயி; நெஞ்சில் எட்டி உதைத்த ஊராட்சிச் செயலர்! - கிராமசபைக் கூட்டத்தில் பரபரப்பு