சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில் இன்று 3 ஆண்டுகளுக்குப் பிறகு, சேலம் – சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் சென்னையில் இருந்து சேலம் வந்த விமானத்தில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை உட்பட 54 பேர் பயணித்து வந்தனர். சேலம் வருகை புரிந்த ஆளுநருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பூங்கொத்து வழங்கி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை கர்நாடக மாநிலத்திற்கு செல்ல இருப்பதால், சேலம் அஸ்தம்பட்டியில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்திவிட்டு, மாலை கிளம்பவிருக்கிறார். கோவா ஆளுநரின் சேலம் வருகை என்பது, முன்கூட்டியே அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தெரிந்த ஒன்றாக இருந்து வந்தது.தேசியக்கொடி இல்லாமல் உள்ள வாகனம்!
அதற்காக சேலம் தமிழ்நாடு-கர்நாடகா எல்லை முதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், சேலம் வருகை புரிந்த ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு அரசின் மூலம் வழங்கப்படும் அங்கீகாரம் என்பது வழங்கப்படமால் போய்விட்டதாக அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. காரணம், ஆளுநர் விமான நிலையத்திலிருந்து பயணித்து சென்ற வாகனத்தில் தேசியக்கொடி இல்லாமல் இருந்திருக்கிறது. தேசியக்கொடி இல்லாத காரிலேயே விருந்தினர் மாளிகை வரை, ஆளுநர் பயணித்ததாக கூறப்படுகிறது. இதையெல்லாம் முன்கூட்டியே ஆராய்ந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய அதிகாரிகள், ஆளுநரை அவமதிக்கும்விதமாக தேசியக்கொடி இல்லாத வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஸ்ரீதரன் பிள்ளை
இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க. சுற்றுச்சூழல் துறை பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவர் கோபிநாத், “தமிழ்நாடு அரசு திட்டமிட்டே இது போன்று ஆளுநரை அவமதிக்கும்விதமாக செய்துள்ளது. ஒரு மாநிலத்தில் ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை எப்படி கொடுக்க தவறியது அரசு... தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் திட்டமிட்டு செய்த சதி இது” என்றார்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட (பொறுப்பு) எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதத்திடம் பேசியபோது, “இது குறித்து ரெவென்யூ டிபார்ட்மென்ட்ல தான் கேக்கணும். இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை” என்றார்.சேலம்: வாடகைக் கட்டடத்தில் காவல் நிலையம்; கழிப்பறை வசதிகூட இல்லாததால், அவதிக்குள்ளாகும் காவலர்கள்!
http://dlvr.it/Sy7K3R
Monday, 30 October 2023
Home »
» சேலம்: `ஆளுநர் காரில் தேசியக்கொடி எங்கே... திட்டமிட்ட சதி'- பாஜக குற்றச்சாட்டும், போலீஸ் விளக்கமும்!