சென்னை அம்பத்தூரிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், அக்டோபர் 23-ம் தேதியன்று இரவு மதுபோதையில் கட்டை, இரும்புக்கம்பிகளுடன் தங்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டனர். இதைத் தடுக்கச் சென்ற போலீஸாரையும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியிருக்கின்றனர்.வடமாநிலத் தொழிலாளர்கள் - அம்பத்தூர் தொழிற்சாலை
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.
அதோடு, `தமிழகத்துக்கு வேலைக்கு வரும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை, பணிபுரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவுசெய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு (ILP - Inner Line Permit) முறையை நடைமுறைப்படுத்த தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்' எனவும் சீமான் வலியுறுத்தினார்.விகடன் கருத்துக்கணிப்பு
அதைத் தொடர்ந்து, சீமானின் வலியுறுத்தல் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை?' என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `நியாயமானதே, தேவையில்லாதது, கருத்து இல்லை' என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.விகடன் கருத்துக்கணிப்பு
இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக, 62 சதவிகிதம் பேர் `வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை நியாயமானதே' எனக் கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 35 சதவிகிதம் பேர் `சீமானின் கோரிக்கை தேவையில்லாதது' என்றும், 3 சதவிகிதம் பேர் `கருத்து இல்லை' என்றும் தெரிவித்திருக்கின்றனர்.விகடன் கருத்துக்கணிப்பு
தேர்தல் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகளுக்கு யார் நிதியளிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள குடிமக்களுக்கு உரிமை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது தற்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்...
https://www.vikatan.com/தாக்குதலுக்குள்ளான காவலர்: `வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு வேண்டும்!’ - சீமான்
http://dlvr.it/Sy9syR
Tuesday, 31 October 2023
Home »
» `வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு வேண்டுமா..?' - விகடன் கருத்துக்கணிப்பு முடிவு!