மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, கடந்த லோக் சபா தேர்தலுக்கு ஓராண்டு முன்பாக 2018-ல் `தேர்தல் பத்திரம்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, தனிநபரோ, ஒரு நிறுவனமோ பணத்தை வங்கி மூலம் தேர்தல் பத்திரமாகப் பெற்று, அதை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். அரசியல் கட்சிகள், அந்தத் தேர்தல் பத்திரங்களை நிதியாக மாற்றிக்கொள்ளலாம். குறிப்பாக, இதில் யார் நிதி கொடுத்தார்கள் என்பது ரகசியமாக வைக்கப்படுகிறது.தேர்தல் பத்திரம்
அதேசமயம், இது வெளிப்படைத்தன்மையில்லாமல் இருப்பது கறுப்புப் பண பதுக்கலுக்கு வழிவகுக்கும் என, இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. மேலும், இந்தத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள்மீது, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து பேர்கொண்ட நீதிமன்ற அமர்வு, நாளை விசாரணை நடத்தவிருக்கிறது.
இந்த நிலையில், அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரம் குறித்து அறிய குடிமக்களுக்கு உரிமையில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக, மத்திய அரசு சார்பிலான எழுத்துபூர்வ வாதத்தை அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்திருக்கிறார். அதில், ``நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படாமல் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் வகையில், பொது உரிமை இருக்க முடியாது. தேர்தல் பத்திரம் திட்டமானது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(2)-ன்கீழ் வருகிறது. இது அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதில் நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கத்தை அனுமதிக்கிறது.உச்ச நீதிமன்றம்
எனவே, இதில் யார் நிதி கொடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள குடிமக்களுக்கு உரிமையில்லை. வெளிப்படைத்தன்மைக்கு தேவையானதை அறியும் உரிமை என்பது தேவையான நோக்கங்களுக்காக மட்டுமே இருக்க முடியும். மேலும், இந்தத் தேர்தல் பத்திரங்கள் திட்டம் பங்களிப்பாளருக்கு ரகசியத்தன்மையின் பலனை நீட்டிக்கிறது. அதோடு, இந்தத் திட்டம், சுத்தமான பணம் (Clean Money) பங்களிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதோடு, அதை ஊக்குவிக்கவும் செய்கிறது. வரிக் கடமைகளுக்குக் கட்டுப்படுவதை உறுதிசெய்கிறது. இதனால், தற்போதுள்ள எந்த உரிமையையும் இது மீறாது" என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பா.ஜ.க தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.5,000 கோடி நிதி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
RTI: `பெருமுதலாளிகளுக்கு மோடி அரசு தள்ளுபடி செய்தது 25 லட்சம் கோடியா?' | The Imperfect Show
http://dlvr.it/Sy9smr
Tuesday 31 October 2023
Home »
» Electoral Bonds: ``அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரம் பற்றி அறிய மக்களுக்கு உரிமையில்லை!" - மத்திய அரசு