தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. 2018-ல் நடந்ததுபோலவே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாகவும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட ஐந்து மாநிலத் தேர்தலுக்கான பிரசாரங்களும் பல்வேறு வகைகளில் சூடுபிடித்திருக்கின்றன.பிரதமர் மோடி
இந்த நிலையில், மிசோரத்தில் இரண்டாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதைத் தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``மணிப்பூரில் தற்போதுள்ள சூழ்நிலை மத்திய அரசின் ஒரே சித்தாந்தம், ஒரே அமைப்பு என்ற அணுகுமுறையின் விபரீதம். மணிப்பூர்தான் ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டின் விளைவுக்கு உதாரணம். மிசோரம் மக்களின் மத அடித்தளம் மற்றும் மொழிகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தாக்கப்படுகின்றன. பா.ஜ.க, இந்தியாவை ஒரே சித்தாந்தம் ஒரு அமைப்பால் ஆள வேண்டும் எனத் துடிக்கிறது. அதைத்தான் எதிர்க்கட்சிகளின் `இந்தியா' கூட்டணியினரான நாங்கள் எதிர்த்துப் போராடுகிறோம்.
டெல்லியிலிருந்து மிசோரம் ஆட்சி செய்யப்பட வேண்டுமா... மிசோரம் மக்கள்தான் அவர்களின் எதிர்காலத்துக்கான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் மக்கள் தங்களையும் தங்கள் மத மற்றும் சமூக நடைமுறைகளையும் வெளிப்படுத்தச் சுதந்திரமான சூழலில் இருக்க வேண்டும். அஸ்ஸாம் முதலமைச்சரும் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் (NEDA) ஒருங்கிணைப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஆர்.எஸ்.எஸ் மிசோரத்துக்குள் நுழைவதற்கான கதவைத் திறக்க முயல்கிறார்.ராகுல் காந்தி
இது வடகிழக்கின் கலாசார அழிவுக்கு வழிவகுக்கும்... அது நுழைந்தால் மாநிலத்தின் கலாசாரங்கள் அழிக்கப்படும். மிசோரத்திலுள்ள MNF, ZPM ஆகிய இரண்டு மாநிலக் கட்சிகளும், இந்த மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வுக்கான நுழைவு புள்ளிகள். MNF நேரடியாக பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது, ZPM நேரடியாக பா.ஜ.க-வை எதிர்த்துப் போராடவில்லை. அனைத்து மதங்களும், அனைத்து கலாசாரங்களும், அனைத்து வரலாறுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியா கூட்டணி நம்புகிறது.
மக்களுக்கு அதிகாரம் வழங்குவதே எங்கள் பார்வை, அரசியலமைப்பைப் பாதுகாப்பதன் மூலம் இந்தியா என்ற கருத்தை நாங்கள் பாதுகாப்போம். மேலும் மக்கள் தங்கள் மதம் மற்றும் கலாசாரத்தைப் பொருட்படுத்தாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும், இந்தியாவில் வாழச் சுதந்திரமும் வசதியும் இருப்பதை உறுதி செய்வோம்.மோடி, அமித் ஷா
இந்தியா கூட்டணி நாட்டின் 60 சதவிகித வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மிசோரம் மாநிலத்தில் வேலைவாய்ப்பு என்பது பல பிரச்னைகளுக்கு மத்தியில் பெரும் கவலையாக இருக்கிறது என்பதையும், இந்த சவால்களைக் காங்கிரஸால் சமாளிக்க முடியும் என்பதையும் மிசோரம் இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
"ஜனவரியில் கூட்டணி அமைத்து, தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்!" - சொல்கிறார் பிரேமலதா
http://dlvr.it/Sxbbdq
Wednesday, 18 October 2023
Home »
» ``பாஜக, ஒரே சித்தாந்தத்தால் இந்தியாவை ஆள துடிக்கிறது; அதை எதிர்த்துதான் INDIA போராடுகிறது!" - ராகுல்