நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் `லியோ' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. தற்போதுவரையில் யூடியூபில் மட்டும் 3.7 கோடி பார்வைகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேநேரம் அந்த ட்ரெய்லரில் விஜய் பேசியிருக்கும் கெட்ட வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தி, எதிர்ப்புகளையும் பெற்றுவருகிறது. லியோ
இந்த நிலையில், ட்ரெய்லர் வெளியான அக்டோபர் 5-ம் தேதி மாலை 6:30 மணிக்கு சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுக்கான சிறப்பு `ட்ரெய்லர் காட்சி' திரையிடப்பட்டது. இதைக் காண்பதற்காக விஜய்யின் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கை நோக்கிப் படையெடுத்தனர். திரையரங்கினுள் `லியோ’ ட்ரெய்லர் வெளியானபோது, மெர்சலான விஜய் ரசிகர்கள் கத்தி, ஆரவாரம் செய்தனர். அதில் வெறித்தனமான பல விஜய் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் திரையரங்கின் இருக்கைகள்மீது ஏறிக் குதித்து நடனமாடினர். இதனால் 200-க்கும் மேற்பட்ட இருக்கைகள் சேதமடைந்தன. இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பலரும் விஜய் ரசிகர்ள் செய்த இந்தச் சம்பத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். Leo Trailer: 'லியோ' படத்தின் ட்ரெய்லர் இதோ!
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வல அனுமதி தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி ஜெயச்சந்திரன், `` `லியோ’ திரைப்பட ட்ரெய்லர் வெளியிட்டபோது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதற்கும், ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டதற்கும் காவல்துறையினரின் தவறான கையாளுதலே காரணம்" என அதிருப்தி தெரிவித்தார். மேலும், ``இது போன்ற நிகழ்வுகளுக்கு பார்க்கிங்கில் ஸ்க்ரீன் அமைத்து, தேவையான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் ரசிகர்களைக் கையாண்டிருந்தால் இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்காது. ஆகவே, இது மாதிரியான நேரங்களில் காவல்துறை உரிய அனுமதி வழங்கி, எந்த ஒரு சேதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பும் வழங்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.விஜய் ரசிகர்கள்
பின்னர், இதற்கு விளக்கமளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, `` `லியோ’ ட்ரெய்லரை ரோகிணி திரையரங்குக்கு வெளியில் திரையிடுவது தொடர்பாக அனுமதி கேட்டு எந்த விண்ணப்பமும் எங்களுக்கு வரவில்லை. அனுமதி கேட்டிருந்தால் பரிசீலிக்கப்பட்டிருக்கும். அதேநேரம், திரையரங்கினுள்ளே ட்ரெய்லர் திரையிட எந்தவித அனுமதியும் பெறத் தேவையில்லை" என்றார்.
மேலும், ``ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளின்போது போலி டிக்கெட்டுகள் மூலமாக ரசிகர்கள் குவிந்ததுபோல, `லியோ’ படத்தின் இசை வெளியீட்டின்போது நடந்து விடாமல் இருக்க கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால், அந்த நிகழ்ச்சியை, படத் தயாரிப்பு நிறுவனம் தாமாகவே ரத்துசெய்துவிட்டது. எனவே, அதற்கும் காவல்துறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.விஜய்: `லியோ' இசை வெளியீட்டு விழா ரத்தும், அரசியல் பேச்சுகளும்! | ஒரு பார்வை
திரையரங்கில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை. புகார் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் வேண்டுமென்றே விஜய் ரசிகர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும். காவல்துறையைப் பொறுத்தவரை எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுப்பதில்லை" என்று விளக்கம் அளித்தார்.சென்னை உயர் நீதிமன்றம்
இந்த நிலையில், விஜய் ரசிகர்களின் செயல்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்து திரைப்பட விமர்சகர்கள், பிற நடிகர்களின் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர். மேலும் சிலர், `விஜய், ரசிகர்கள் சார்பில் இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்' எனக் கோரிவருகின்றனர். இந்த நிலையில் ரோகிணி தியேட்டரின் உரிமையாளரைத் தொடர்புகொண்டு நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்ததாக உறுதிபடுத்தப்படாத ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.லியோ
என்ன இருந்தாலும், வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகவிருக்கும் `லியோ' படத்தை ரசிகர்கள் தியேட்டரில்தான் பார்க்கப்போகிறார்கள். தாங்கள் அமர்ந்து பார்க்கப்போகும் தியேட்டரை, தாங்களே சேதப்படுத்தினால் யாருக்கு நஷ்டம்... இதைப் புரிந்துகொண்டு அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் கட்டுக்கோப்பாகச் செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நடிகர்களும், தங்களின் ரசிகர்களுக்கு நன்னடத்தையை அறிவுறுத்த வேண்டும். அதேபோல தீவிர ரசிகர்கள் ஒரே இடத்தில் குழுமினால் என்ன மாதிரியான அசாதாரண சூழல் நிகழும் என்பதை உணர்ந்து முன்கூட்டியே காவல்துறை பாதுகாப்பு வேண்டி திரையரங்க நிர்வாகம் காவல் நிலையத்தை அணுக வேண்டும். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதைப்போல, மூன்று தரப்பினரும் இவற்றை உணர்ந்து இனிவரும் காலங்களிலாவது முறையாகச் செயல்படவேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
LEO Audio Launch: "அரசியல் காரணமில்லை!"- `லியோ' ஆடியோ லாஞ்ச் ரத்து; படக்குழு சொல்லும் காரணம் என்ன?
http://dlvr.it/Sx8DRL
Sunday, 8 October 2023
Home »
» LEO: `தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்... நொறுக்கப்பட்ட ரோகிணி தியேட்டர்!' - யார்மீது தவறு?!