`எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியான பிறகு மற்றொரு பேச்சு’
சென்னையில் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையைக்கொண்டிருக்கும் முதல்வரே, பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்த நீங்கள், 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181-ம் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கடந்த ஒன்பது நாள்களாக, அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் போராடிவருகின்றனர். எடப்பாடி பழனிசாமி
அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181-வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாகப் பரிசீலிக்காமல், வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்துவைத்திருப்பதையும், வன்மையாகக் கண்டிக்கிறேன்.
`100 சதவிகிதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்’ என்று பொய்யைக்ஷ் சிறு தயக்கம்கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயலும் விடியா திமுக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, கைதுசெய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்குத் தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
புதுச்சேரியிலும் ரெய்டு!
புதுச்சேரியிலுள்ள தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துவருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியிருக்கும் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. இந்த நிலையில், புதுச்சேரி ஊசுட்டேரி பகுதியில் இருக்கும் அவருக்குச் சொந்தமான லட்சுமி நாராயணன் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக அலுவலகத்தில் சோதனை நடத்திவருகின்றனர்.
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம், ஹோட்டல்களில் ஐ.டி ரெய்டு!
அரக்கோணம் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் சென்னை அடையாறு வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். தி.நகரிலுள்ள ஹோட்டல், வேளச்சேரியிலுள்ள பல் மருத்துவமனை, அடையாறு பகுதியிலுள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டுவருகின்றனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
http://dlvr.it/Sx1XnK
Thursday 5 October 2023
Home »
» Tamil News Live Today: `எதிர்க்கட்சியாக ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக மற்றொரு பேச்சு’ - ஆசிரியர்கள் விவகாரத்தில் எடப்பாடி