தங்கள்மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப்போவதாகக் கூறிக்கொண்டு, காஸா-மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் போரில், 3,826 பாலஸ்தீன குழந்தைகள் உட்பட மொத்தம் 9,227 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில், உறவுகள், உடைமைகளை இழந்து, எஞ்சிய உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகள் முகாம் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இஸ்ரேல் - காஸா தாக்குதல்
இதற்கு முன்னர் காஸாவின் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தீவிர தாக்குதல் குறித்த தகவல்களும், உலக அளவில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில், காஸாவிலுள்ள சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "இஸ்ரேலியத் தாக்குதல் படையால் முற்றுகையிடப்பட்ட வடக்கு காஸாவிலிருந்து, காயமடைந்தவர்களை வெளியேற்றிய ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 60 பேர் காயமடைந்திருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "காஸா பகுதி போர்க்களம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புக்காக தெற்கு நோக்கி வெளியேறுமாறு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறது.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஐ.நா சபையில் இஸ்ரேலுக்கு எதிரான போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது. இந்தத் தாக்குதலில், சர்வதேசப் போர் விதிமீறல் தொடர்வதாக ஐ.நா கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், இஸ்ரேலின் டெல் அவிவில் நெதன்யாகுவை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தியதாகவும், அதற்கு இஸ்ரேலிய அதிபர் நெதன்யாகு பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தப் பேச்சுக்கே வாய்ப்பில்லை என மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
காஸா: `மக்களின் அகதிகள் முகாமையும் விட்டுவைக்காத இஸ்ரேல்' - ஐ.நா கண்டனமும், உலகநாடுகளின் அமைதியும்!
http://dlvr.it/SyPZlf
Sunday, 5 November 2023
Home »
» காஸாவில் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்... 15 பேர் பலி; அமெரிக்காவின் கோரிக்கையை மறுத்த நெதன்யாகு அரசு!