மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 76 ஏக்கர் பரப்பளவிலான சட்டவிரோத கசகசா பண்ணைகள் அழிக்கப்பட்டிருப்பதாக, அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, மணிப்பூர் மாநிலக் காவல்துறை, வனத்துறை மற்றும் மணிப்பூர் ரைஃபிள்ஸ் ஆகியவற்றின் கூட்டுப் படை, கடந்த செவ்வாய்க்கிழமை 39 ஏக்கர் மற்றும் புதன்கிழமை 37 ஏக்கர் என மொத்தமாக 76 ஏக்கர் அளவிலான சட்டவிரோத கசகசா பயிர்களை அழித்திருக்கின்றன.கசகசா
கடந்த இரண்டு நாள்களில் மாநில அதிகாரிகளால் அழிக்கப்பட்ட இந்தப் பண்ணைகளின் மொத்த பரப்பளவானது, 40 கால்பந்து மைதானங்களின் அளவுக்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது. மணிப்பூர் மலைப்பகுதிகளில் பெரிய அளவிலான சட்டவிரோத கசகசா சாகுபடிக்கு எதிராகத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
அபின் மற்றும் ஹெராயின் உற்பத்தியால் மாநிலத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் அதிகரித்திருப்பதாகவும், இந்த போதைப்பொருள் வணிகமே குக்கி மக்களுக்கும் மைதேயி மக்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுவதற்கான ஒரு காரணமாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படியான சூழலில்தான், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 80 கி.மீ தொலைவிலுள்ள உக்ருல் மாவட்டத்தின் தோரா சாம்புங் மலைத்தொடரில் இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்
இதுபற்றி, X சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் பிரேன் சிங், ``76 ஏக்கர் அளவிலான சட்டவிரோத கசகசா வயல்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. குழாய் இணைப்பு போன்ற பிற உள்கட்டமைப்புகள், உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவையும் அழிக்கப்பட்டிருக்கின்றன. போதைப்பொருள்களுக்கு எதிரான போரை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. போதைப்பொருள் அச்சுறுத்தலை மணிப்பூரிலிருந்து முற்றிலும் வேரறுக்கும் வரை இந்த போரை நிறுத்தப்போவதில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.மணிப்பூர்: வாழ்வாதாரத்தை மீட்க பொம்மை தயாரிக்கும் பயிற்சி - கை கொடுக்கட்டும் புதிய முயற்சி!
http://dlvr.it/Sz0qGX
Saturday, 18 November 2023
Home »
» மணிப்பூர்: ``2 நாள்களில் 76 ஏக்கர் அளவிலான சட்டவிரோத போதைப் பயிர்கள் அழிப்பு''- முதல்வர் பிரேன் சிங்