கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, தீபாவளியன்று தனது வீட்டுக்கு சட்டவிரோதமாக மின்கம்பத்திலிருந்து நேரடியாக மின்சாரத்தைத் திருடியதாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `அரசு இலவசமாக 200 யூனிட் மின்சாரம்தான் வழங்குகிறது, 2,000 யூனிட் அல்ல. கர்நாடகா இருளில் மூழ்கிவிட்டது என்று கூறிவிட்டு, இப்போது திருட்டு மின்சாரத்தில் உங்கள் வீட்டை மின்விளக்குகளால் ஜொலிக்கவிட்டிருக்கிறீர்கள்' என்று குமாரசாமியைச் சாடியது.ஹெச்.டி.குமாரசாமி
பின்னர், இந்த கவனக்குறைவுக்கு வருந்துவதாகவும், BESCOM (பெங்களூரு மின்சாரம் வழங்கும் நிறுவனம்) அதிகாரிகள் வந்து ஆய்வுசெய்து நோட்டீஸ் வழங்கினால் அபராதத்தைச் செலுத்துவதாகவும் குமாரசாமி பதிலளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, BESCOM அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய மின்சாரச் சட்டம் பிரிவு 135-ன் (மின்சாரத் திருட்டு) கீழ் குமாரசாமி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், மின்கம்பத்திலிருந்து சட்ட விரோதமாக மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தியதற்காக ரூ.68,526 அபராதம் செலுத்தியிருக்கிறார் குமாரசாமி.
இது குறித்து, தனது கட்சி அலுவலகம் முன்பு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, ``தீபாவளியன்று எங்கள் வீட்டில் அவ்வாறு நடந்ததற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், மின்விளக்குகளுக்கான மின்சார நுகர்வு 1 கிலோவாட்டுக்கும் குறைவானதுதான். ஆனால், 2.5 கிலோவாட் என்று கணக்கிட்டு 7 நாள்களுக்கு 71 யூனிட்டுகள் என்று பில்கொடுக்கப்பட்டிருக்கிறது. 71 யூனிட்டுகளுக்கு, மூன்று மடங்கு அபராதம், அதாவது 68,526 ரூபாய்.ஹெச்.டி.குமாரசாமி
அதேசமயம், என்னை மின்சார திருடன் என்று முதல்வரும், துணை முதல்வரும் முத்திரை குத்தியிருக்கின்றனர். இவர்களின் மின்சார திருட்டு குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் நான் பயப்படவில்லை. இவர்களைப் (காங்கிரஸ்) போல் நான் திருடவில்லை. BESCOM வழங்கிய பில் மற்றும் அபராதத்தை செலுத்தி விட்டேன். இனிமேல் என்னை மின்சார திருடன் என்று கூறுவதை நிறுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
இருப்பினும், குமாரசாமியைச் சாடிய முதல்வர் சித்தராமையா, ``எந்த தவறும் செய்யவில்லை என்றால், எதற்காக அபராதம் செலுத்தினார்?" என்று கேள்வியெழுப்பினார்.`தாலியைக் கழற்று' கர்நாடக சிவில் சர்வீஸ் தேர்வில் கெடுபிடி... திருமணமான பெண்கள் வேதனை..!
http://dlvr.it/Sz0YQH
Saturday, 18 November 2023
Home »
» `இனி மின்சார திருடன் எனக் கூறக் கூடாது'- ரூ.68,526 அபராதம் செலுத்திய குமாரசாமி; காங்கிரஸ்மீது சாடல்!