தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவருகிறது. இதில், 4.5 சதவிகித கொழுப்புச்சத்துடன் லிட்டர் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை, மக்கள் பெரிதும் வாங்குவதாகக் கூறப்படுகிறது.ஆவின் பால் பாக்கெட் கவர்கள்!
அதாவது, சென்னையில் விற்பனையாகும் மொத்த பால் பாக்கெட்டுகளில் பச்சை நிற பால் பாக்கெட் மட்டும் 40 சதவிகிதம். இப்படியிருக்க, பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நவம்பர் 25-ம் தேதியுடன் நிறுத்துவதாகவும், அதற்கு பதில் அதே விலையில் 3.5 கொழுப்புச்சத்துடைய டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகள் விற்பனையாகும் எனவும், அரசு முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு, எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அண்ணாமலை தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்திருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.அண்ணாமலை
மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40 சதவிகிதப் பங்குள்ள, 4.5 சதவிகித கொழுப்புச்சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவிகித கொழுப்புச்சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பாலை விற்பனைசெய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும்.
ஏற்கெனவே 6 சதவிகித கொழுப்புச்சத்து இருக்கவேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79 சதவிகித கொழுப்புச்சத்தே இருப்பது, உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக்கூடத்தில், தமிழ்நாடு பா.ஜ.க மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம்.
தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5%… pic.twitter.com/6fLzNIISCk— K.Annamalai (@annamalai_k) November 20, 2023 பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
இவ்வாறு கொழுப்புச்சத்துகளைக் குறைத்து, ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்றே விளையாடிக்கொண்டிருக்கிறது இந்த ஊழல் தி.மு.க அரசு. மேலும், பாலில் கொழுப்புச்சத்தைக் குறைத்துவிட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்துவருவதை தி.மு.க அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பாலை வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.‘பாழாகும் பால் வளத்துறை!’ - திக்கித் திணறும் மனோ தங்கராஜ்
http://dlvr.it/Sz5qdH
Tuesday, 21 November 2023
Home »
» Aavin `நிறுத்தப்படும் பச்சை நிற பால் பாக்கெட்; கொழுப்புச்சத்து அளவில் மோசடி'- அண்ணாமலை குற்றச்சாட்டு