ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடைவிதித்து தமிழக அரசு இயற்றிய `தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டுகள் தடை மற்றும் விளையாட்டுகள் ஒழுங்குபடுத்துதல்' சட்டத்தை ரத்துசெய்யக் கோரி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், `இத்தகையச் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாகக் கருத முடியாது' என வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆன்லைன் ரம்மி
அதேபோல, `சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது' எனத் தமிழக அரசுத் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
செப்டம்பர் 13-ம் தேதி, அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது நீதிமன்றம்.
இந்த நிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, ``ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்ற நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரிக்கிறோம். அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தமிழக அரசு தடைசெய்தது செல்லும். சென்னை உயர் நீதிமன்றம்
அதேசமயம் திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளைத் தடைசெய்த பிரிவுகளை ரத்துசெய்கிறோம்" எனத் தெரிவித்தது. மேலும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம் எனவும் நீதிமன்ற அமர்வு, தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறது.மத்திய அரசின் விதிமுறைகளால் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஆபத்தா?!
http://dlvr.it/SycN8J
Thursday, 9 November 2023
Home »
» `ரம்மி, போக்கர் போன்ற திறமைக்கான விளையாட்டுகளுக்குத் தடை இல்லை!' - உயர் நீதிமன்றம்