தேவர் ஜயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்கத் தேவருக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்பட்ட தங்கக் கவசத்தை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பதற்காக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரைக்கு வந்திருந்தார்.தேவர் ஜயந்தியில் எடப்பாடி பழனிசாமி
அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, ``பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக யார் கோஷமிட்டார்கள், யார் கல்வி வீசினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஊடகச் செய்தியை பார்த்த பின்புதான் தெரியும். நாங்கள் எல்லோரும் எடப்பாடியார் வண்டியில்தான் சென்றோம். அதனால் கல் எங்கு விழுந்தது என்று எங்களுக்குத் தெரியாது. தற்போது காவல்துறையினர் சிலரைப் பிடித்து விசாரித்துவருவதாகச் சொல்கிறார்கள். காவல்துறைதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். பணம் கொடுத்தால் கல்வீசும் நபர்கள் இருக்கின்றனர். ஆளுநர் மாளிகையில் குண்டுவைத்தவன் நீட் தேர்வு பற்றி கூறியிருக்கிறான். அதேபோல் தற்போது கல்வீசியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வருக்கு வழங்கியதுபோல் உரிய பாதுகாப்பு காவல்துறையால் கொடுக்கப்படவில்லை. முதலமைச்சர் வந்து சென்ற பிறகு காவல்துறையிடம் கட்டுப்பாடு இல்லை. அதனால்தான் அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
பவுன்சர்களின் பாதுகாப்புடன்தான் எடப்பாடி பசும்பொன்னுக்கு வந்தார். அதனால்தான் பாதுகாப்புடன் வந்து செல்ல முடிந்தது. காவல்துறை திட்டமிட்டு எங்களுக்கு முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை” என்றார். திண்டுக்கல் சீனிவாசன்
அப்போது செய்தியாளர்கள், ``கல்வீச்சு சம்பவத்தை ஓ.பி.எஸ் கண்டித்திருக்கிறாரே?’’ என்று கேட்டதற்கு...
``ஓ.பன்னீர்செல்வம் ஏன் இப்போது இரட்டை வேடம் போடுகிறார்... தொட்டிலை ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளிவிடுகிறார். இந்த நாடகமெல்லாம் அதிமுக-விடம் எடுபடாது. அவருடைய நீலிக்கண்ணீரைப் பலமுறை பார்த்துவிட்டோம். ஓ.பி.எஸ் ஏற்கெனவே பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறார். வாகனத்தின் மீது யார் கல் எறிந்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், மகாத்மா காந்தியைப்போல் ஓ.பி.எஸ்-ஸை ஒப்பிட வேண்டாம். ஓ.பி.எஸ்-ஸின் நாடகத்தை யாரும் நம்பத் தயாராக இல்லை. கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டது சரிதான் என்பதுபோல் இருக்கிறது’’ என்றவர்,
``எம்.ஜி.ஆர் ராம்நாடு சென்றபோது எப்படி வரவேற்பு அளிக்கப்பட்டதோ, ஜெயலலிதா தங்கக் கவசம் வைக்கும்போது எப்படி வரவேற்பு அளிக்கப்பட்டதோ அதேபோல் இம்மி அளவுகூட குறையாத வகையில், எடப்பாடியாரைச் சிறப்பாக வரவேற்று `எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்’ என்று மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பசும்பொன்னில் கறுப்பு சிவப்பு சேலை அணிந்து நின்றுகொண்டிருந்த திமுக சகோதரிகள் அனைவரும் இரட்டை இலையைக் காண்பித்தார்கள். திமுக வேட்டியைக் கட்டியவர்கள்கூட `எடப்பாடியார் வாழ்க’ என்று கோஷமிட்டனர்" என்றார்.தங்கக்கவசம் ஒப்படைப்பு
``பிரதமராக எடப்பாடி பழனிசாமி தகுதி உள்ளவர் என்ற கேள்விக்கு அண்ணாமலை சிரித்திருக்கிறாரே?’’ என்ற கேள்விக்கு, ``அண்ணாமலையிடம் செய்தியாளர் கேட்ட கேள்வியே மிகக் கேவலமானது. அதிமுக-வின் இலக்கு 2026-ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதுதான். அவர் ஏன் சிரித்தார் என்று அவரிடம் போய்க் கேளுங்கள்’’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SyGwFC
Thursday, 2 November 2023
Home »
» ”பவுன்சர்கள் பாதுகாப்புடன்தான் எடப்பாடி பழனிசாமி வந்தார்” - விளக்கும் திண்டுக்கல் சீனிவாசன்