“எடப்பாடி கூட்டணியை முறித்துக்கொண்டதால், பா.ஜ.க-வுடன் நீங்கள் கூட்டணிவைக்க வாய்ப்பிருக்கிறதா?”
“எடப்பாடிக்கு இது புதிய பழக்கமா... அம்மா மறைந்தவுடன் சசிகலாவை ஏமாற்றினார். பல மாநிலங்களில் அரசியல் சூழ்ச்சி செய்தது பாரதிய ஜனதா கட்சி. ஆனால் அந்த பா.ஜ.க-வையே முதுகில் குத்திய ஒரே ஆள் எடப்பாடிதான். இன்று ஆட்களை ஏவி, பா.ஜ.க-வையே பேசவைக்கிறார். அதைக் கேட்கக்கூட பா.ஜ.க-வில் யாரும் இல்லை. அண்ணா, பெரியார் மீது பாய்கிற அண்ணாமலை, அ.தி.மு.க பக்கம் ஏன் திரும்புவதில்லை?”அமித் ஷாவைச் சந்தித்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி
“எடப்பாடி தரப்பு பா.ஜ.க-வைத் துணிச்சலாக எதிர்க்கிறதே... நீங்கள்தான் தயங்குகிறீர்கள்போல?!”
“அப்படியா! எடப்பாடியை மோடியை எதிர்த்து பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம். சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்றவர்கள்தான் எதிர்க்கிறார்கள். தங்கமணி, வேலுமணி போன்றோர் பா.ஜ.க கூட்டணி வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். அதனால் எடப்பாடி அணி இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. அதுதான் உண்மை.”
“ஆனால், அந்த எதிர்ப்பைக்கூட உங்கள் தரப்பிடம் பார்க்க முடியவில்லையே?”
“ஓ.பி.எஸ்-ஸைப் பொறுத்தவரையில் யாரையும் தவறாகவோ, கண்ணியக்குறைவாகவோ பேச மாட்டார். அதனால் உங்களுக்கு அப்படித் தெரியலாம். யாராக இருந்தாலும் மதித்தால் மதிப்போம், மிதித்தால் மிதிப்போம் என்று நானே ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாளை ஓ.பி.எஸ் இணைந்தால்கூட, தமிழ்நாட்டில் நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமை வகிக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாடு. எந்தவிதத்திலும் எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். அதனால் எங்கள் தலைமையை ஏற்கிற கட்சிகள் அவர்களாக வரட்டும்.”எடப்பாடி பழனிசாமி
"அ.தி.மு.க கட்சியையும் தொண்டர்களையும் தனது கட்டுப்பாட்டில் எடப்பாடி கொண்டுவந்துவிட்டார் என்பது உண்மைதானே?”
“எடப்பாடியோ, அவரின் அணியினரோ அப்படிச் சொன்னால் அது சுத்தமான பொய். சசிகலா, ஓ.பி.எஸ்., பா.ஜ.க-வுக்கு துரோகம் செய்து ஏமாற்றியிருக்கிறார் எடப்பாடி. பொன்னையன் கூறியதுபோல பலர் எடப்பாடியைச் சுற்றியிருக்க, பலரும் தங்களுக்குக்கீழ் 10, 15 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு கொள்ளையடித்திருக்கிறார்கள். அதனால் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் அவரோடுதான் இருப்பார்கள். அது நிலையாக நீடிக்காது. எம்ஜிஆர் உருவாக்கிய பைலாவை நாசம் செய்துவிட்டார்கள். பெரியார், அண்ணா படங்களைக்கூட மறந்துவிட்டார்கள். அதிமுக-வைச் சிதைத்து சின்னா பின்னமாக்கிவிட்டார் எடப்பாடி. யாரோடு பேரம் பேசி இப்படி நடந்துகொள்கிறார் எனத் தெரியவில்லை. கோடிக்கணக்கான தொண்டர்கள் அவருக்குப் பின்னால் இருப்பது உண்மைதான் என்றால், ஒரு தேர்தலில்கூட வெல்ல முடியாதது ஏன்?”
“சரி முன்பைப்போல பா.ஜ.க தலையிட்டு சமரசம் செய்துவைத்தால் ஏற்க தயாரா?”
“இல்லை. அதற்கு வாய்ப்பே இல்லை. பழனிசாமியை இனி நாங்கள் ஏற்க தயாராக இல்லை. சட்டப்படி தி.மு.க அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பார். சிறையிலிருந்து யாராலும் கட்சி நடத்த முடியாது. ஏற்கெனவே நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகார் இருக்கிறது. எனவே, அவர் தேர்தலில் போட்டியிடவே முடியாத சூழல் ஏற்படும். பணத்துக்காக எடப்பாடியின் பின்னால் இப்போது இருப்பவர்கள் அப்போது இருக்க மாட்டார்கள்.”ஓபிஎஸ்
“ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறதே?”
`` `ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?’ என்று அண்ணா அப்போதே கேட்டுவிட்டார். அண்ணாவின் வழிவந்த எங்களுக்கும் அதுதான் நிலைப்பாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வேறு வேலையே இல்லாததுபோல ஆளுநர் பிரச்னையைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா... அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி கேட்டால் அதற்குக்கூட இழுத்தடித்திருக்கிறார். ஊழலை விசாரிக்கக் கூடாது என்கிறாரா ஆளுநர் எனத் தெரியவில்லை.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/Sz4KRs
Monday, 20 November 2023
Home »
» ``எடப்பாடி அணி இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது..!” - சொல்கிறார் பெங்களூரு புகழேந்தி