தங்களின் ஆப்பிள் ஐ-போன்களை ஹேக் செய்து, ஒட்டுக்கேட்க முயற்சி நடைபெற்றிருப்பதாகப் பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் `ஹேக்கிங் அலர்ட்' ஆதாரங்களுடன் குற்றம்சாட்டியிருப்பது, இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நாடளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது, பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. ஐ போன் நிறுவனம்
ஆதாரத்துடன் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர்கள்:
ஐ-போன்களைப் பொறுத்தவரையில் எளிதில் ஹேக் செய்ய முடியாது. விருப்பப்படும் சாஃப்ட்வேர் ஆப்களையெல்லாம் பயன்பாட்டாளர்களாலும்கூட தரவிறக்கம் செய்ய முடியாது. அதன் பாதுகாப்பு கருதியே பல்வேறு துறைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பெரும்பாலானோரும் ஆப்பிள் போனை விலை அதிகம் என்றாலும்கூட வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில், ஆப்பிள் ஐ-போன் பயன்படுத்திவரும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரின் மொபைலுக்கு திடீரென ஆப்பிள் நிறுவனம் ஓர் அலர்ட் மெசேஜை அனுப்பியிருக்கிறது. அதில், `உங்கள் ஐ-போனை டார்கெட் செய்து ஹேக்கர்கள் அத்துமீறி ஊடுவ முயல்கின்றனர்' என எச்சரிக்கை செய்திருக்கிறது. பெகாசஸ் உளவு: ``மத்திய பாஜக அரசு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை!" - ஆய்வுக்குழு நீதிமன்றத்தில் தகவல்
இந்த அலர்ட் மெசேஜ் ஆம் ஆத்மி கட்சி எம்.பி ராகவ் சத்தா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா - உத்தவ் தாக்கரே பிரிவு எம்.பி பிரியங்கா சதுர்வேதி, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, தி வயர் செய்தி இணையதள ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் எனப் பலருக்கும் வந்திருக்கிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், சசி தரூர், பவன் கேரா மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பேருக்கும் இதே போன்ற அலர்ட் மெசேஜ் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கையாக வந்திருக்கிறது. இந்த அலர்ட் மெசேஜை, அதாவது threat-notifications@apple.com என்ற ஆப்பிள் இ-மெயில் முகவிரியிலிருந்து வந்த எச்சரிக்கைச் செய்திகளை சம்பந்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அதைத் தங்களின் `எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்டு மத்திய அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டியிருக்கின்றனர். மஹுவா மொய்த்ரா
குறிப்பாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா இந்த விவரங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ``அன்புள்ள மோடி சர்கார், ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல, சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி மத்திய அரசைக் குறிப்பிட்டு, ``உங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு... இது குறித்து விசாரிப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி-க்களின் செல்போன் ஹேக் செய்யப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பா.ஜ.க., இளைஞர்களின் கவனத்தை திசைதிருப்ப முயல்கிறது. ஒரு சிலர் மட்டுமே இதற்கு எதிராகப் போராடுகிறார்கள். ஆனால், நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ ஒட்டுக்கேட்டுக்கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை. வேண்டுமென்றால் என் செல்போனையே தருகிறேன், எடுத்துக்கொள்ளுங்கள். செல்போன்களை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயலல்ல. குற்றவாளிகளும் திருடர்களும் செய்யும் செயல். ராகுல் காந்தி
வழக்கமாக மோடி, அமித் ஷாவைத்தான் நம்பர் 1, நம்பர் 2 என்று கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே நம்பர் 1-ஆக இருப்பவர் அதானிதான். அதானிக்காகவே மோடியும், அமித் ஷாவும் வேலை செய்கிறார்கள். பிரச்னைகளை திசைதிருப்பவே மத்திய அரசு இது போன்ற முயற்சியை மேற்கொண்டுவருகிறது" எனக் கடுமையாக விமர்சித்தார். அதேபோல, வழக்கறிஞரும், காங்கிரஸ் எம்.பி-யுமான கபில் சிபல், ``தவறு செய்பவர்களை மத்திய அரசே தன் பக்கம் வைத்திருக்கிறது. பா.ஜ.க ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து அரசியலமைப்புக்கு முரணான செயல்களையே செய்துவருகிறது. அரசியலமைப்பையே மோடி அரசாங்கம் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட உளவுக்கருவிகள்... 140 கோடி மக்களையும் வேவு பார்க்கிறதா மோடி அரசு?
பா.ஜ.க கொடுத்த விளக்கம்:
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ``இந்த விஷயத்தில் மத்திய அரசு அக்கறை செலுத்துகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி, ஆப்பிள் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை இந்தியாவுக்கு மட்டும் வரவில்லை, உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளிலுள்ள மக்களுக்கு இது போன்ற எச்சரிக்கை அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் அனுப்பியிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார். அஸ்வினி வைஷ்ணவ்
அதேநேரம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ``எதிர்க்கட்சித் தலைவர்களை யாராவது பிராங்க் (Prank) செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் அதிகாரபூர்வமாக புகாரளிக்க வேண்டும். அதனடிப்படையில் மத்திய அரசு சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக நினைக்கிறேன். அதனால்தான், அவர்கள் எல்லாவற்றிலும் சதி நடப்பதாகவே பார்க்கிறார்கள்" என விமர்சனம் செய்திருக்கிறார். மேலும், பா.ஜ.க ஐடி விங் பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா, ``ஆப்பிள் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. விளக்கம் கிடைக்கும் வரை எதிர்க்கட்சிகள் காத்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார். பியூஷ் கோயல்
ஆப்பிள் சொன்ன விளக்கம்:
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தரப்பு, ``இந்திய அரசு ஆதரவுடன் உளவு பார்க்கப்படுவதாக நாங்கள் கூறவில்லை. இந்த ஹேக்கிங் எச்சரிக்கை தொடர்பான சில நோட்டிஃபிகேஷன்கள் தவறானவையாகவும் இருக்கலாம் அல்லது கண்டறியப்படாமலும் இருக்கலாம்" எனத் தெரிவித்திருக்கிறது.140 கோடி மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிருந்து SPYWARE வாங்குகிறதா இந்தியா? | The Imperfect Show
http://dlvr.it/SyKPsr
Friday, 3 November 2023
Home »
» எதிர்க்கட்சியினரை போனில் உளவு பார்க்கிறதா மத்திய அரசு? - சர்ச்சையும் பின்னணியும்!