``தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது ஆளுநர் மாளிகை" என ஆளும் தி.மு.க விமர்சிக்கும் அளவுக்கு, அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் முற்றிக்கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் அரசு கொடுத்த உரையில் ஆளுநர் திருத்தம் செய்து வாசித்தது, அதை உடனடியாக தமிழக அரசு நீக்கியது, மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் கிடப்பில்போடுவது, திராவிடம் - சனாதனம் குறித்த ஆளுநரின் கருத்துகளால் வெடித்த சர்ச்சைகள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஆர்.என்.ரவி - ஸ்டாலின்
மேலும், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான ஆளுநரின் விமர்சனம், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் விவகாரம் என ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநரானதிலிருந்தே அவருக்கும் அரசுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில்தான், தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்குக் கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தது தமிழக அரசு. பஞ்சாப்பிலும் முன்னதாக இது போன்று ஒரு வழக்கு, ஆளுநரை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசால் தொடரப்பட்டது.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "தமிழக ஆளுநர் மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பாக, மாநில அரசு முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மசோதாமீது மாற்றுக் கருத்து இருந்து திருப்பி அனுப்புவதாக இருந்தால், உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது.ஆளுநர் ஆர்.என்.ரவி
எனவே, தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்க ஆளுநரின் செயலாளருக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வரும் 24-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டது. இந்த நிலையில்தான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சபாநாயகர் அப்பாவு, ``வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெறும். அதில், ஆளுநர் திருப்பியனுப்பிய 10 மசோதாக்களும், மீண்டும் நிறைவேற்றப்படும். சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆனது, இறையாண்மைமிக்கது. மக்களின் கருத்துகளைத்தான் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார். தற்போது மீண்டும் இந்த மசோதா விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.புதுச்சேரி: பழங்குடியின மக்களை தரையில் அமரவைத்த அதிகாரிகள்! - ஆளுநர் தமிழிசை விழாவில் நடந்தது என்ன?
http://dlvr.it/SyvswD
Thursday, 16 November 2023
Home »
» நிலுவையிலுள்ள மசோதாக்களை அரசுக்குத் திருப்பியனுப்பிய ஆளுநர்; சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டும் அப்பாவு